ஒரு ஆண்டில் நாம் பல பருவங்களை எதிர்கொள்கிறோம். வானிலை மாறிக்கொண்டே இருக்கிறது. வானிலை மாற மாற, அதற்கேற்ப, உடல்நிலையும் மாறுகிறது. அதன் தாக்கம் நமது சருமத்தில் தெரியத் தொடங்குகிறது.
கோடைக்காலத்தில் நம் பாதங்களில் வெடிப்பு (Cracked Heels), தோல் உலர்தல், சொரசொரப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன. நமது குதிகால்கள் பெரும்பாலும் அதிகமாக பாதிக்கப்படுகின்றன. கணுக்காலில் எண்ணெய்ப்பசை இல்லாத காரணத்தால், சருமம் மிக விரைவாக வறண்டு போகும். இந்த பாதிப்பு அதிகம் உள்ளவர்களுக்கு, அப்பகுதிகளில் வலி மற்றும் வெடிப்புகளிலிருந்து ரத்தம் கசிதல் போன்ற பிரச்சனைகளும் ஏற்படலாம்.
பாத வெடிப்பை சரி செய்து, உங்கள் பாதகங்களை பாதுகாப்பாக வைத்துக்கொள்ள சில எளிய வீட்டு வைத்திய முறைகளை இந்த பதிவில் காணலாம். இவற்றின் மூலம் குதிகால் வெடிப்பிலிருந்து மிகவும் விரைவாக நிவாரணம் பெறலாம்.
தேங்காய் எண்ணெயின் பயன்பாடு
– தேங்காய் எண்ணெயை தவறாமல் பயன்படுத்தி வந்தால் குதிகால் வெடிப்பு பிரச்சினை நீங்கும்.
– இதற்கு, நீங்கள் இரவில் தூங்குவதற்கு முன் பாதிக்கப்பட்ட பகுதியில் தேங்காய் எண்ணெயை தடவ வேண்டும்.
– தேங்காய் எண்ணெயை சிறிது சூடாக்கியும் குதிகால் வெடிப்பில் தடவலாம்.
– தேங்காய் எண்ணெய் (Coconut Oil) கொண்டு நன்றாக மசாஜ் செய்தாலும் நல்ல பலன் கிடைக்கும்.
– தூங்கும் போது சாக்ஸ் அணிய மறக்காதீர்கள்.
– காலையில் எழுதவுடன் முதலில் உங்கள் கால்களை தண்ணீரால் கழுவ வேண்டும்.
ஆப்பிள் வினிகர் மற்றும் எலுமிச்சையின் பயன்பாடு
வெடிப்பு வந்த மற்றும் உலர்ந்த கணுக்கால் பிரச்சினையை சரி செய்ய ஆப்பிள் வினிகர் உதவியாக இருக்கும். அதில் எலுமிச்சை சாற்றையும் சேர்த்தால், இன்னும் சிறந்த முடிவுகளைப் பெறலாம். இவை இரண்டும் அழற்சி எதிர்ப்பு மற்றும் அமிலக் கூறுகளைக் கொண்டிருக்கின்றன. இவை உலர்ந்த செல்களை வெளியேற்றி புதிய செல்களை ஊகுவித்து சருமத்திற்கு புத்துணர்ச்சி அளிக்கின்றன.