இன்று காலை செய்தியாளர்களைச் சந்திக்கும் ராகுல் காந்தி : கொரோனா வெள்ளை அறிக்கை வெளியீடு

Date:

இன்று காலை 11 மணிக்கு ராகுல் காந்தி செய்தியாளர்களை சந்தித்து கொரோனா குறித்த காங்கிரஸ் கட்சியின் வெள்ளை அறிக்கையை வெளியிடுகிறார்.

நாடெங்கும் கொரோனா பரவல் கட்டுக்குள் வராமல் உள்ளது. குறிப்பாக இரண்டாம் அலை கொரோனாவில் தற்போது பாதிப்பு பெருமளவில் குறைந்த போதும் மரண எண்ணிக்கை குறையாமல் உள்ளது. ஆயினும் மரண எண்ணிக்கை விவரங்களை மத்திய அரசு குறைத்துக் காட்டுவதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றன.

அரசின் அறிவிப்பின்படி இந்தியாவில் இதுவரை 2,99,73.457 பேர் பாதிக்கப்பட்டு அதில் 3,89,268 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 2,89,13,191 பேர் குணம் அடைந்து தற்போது 6,59,208 பேர் சிகிச்சையில் உள்ளனர். மேலும் விரைவில் கொரோனா மூன்றாம் அலை தாக்கம் ஏற்படலாம் என வும் பாதிப்பு மேலும் அதிகரிக்கும் எனவும் மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில் இன்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று செய்தியாளர் சந்திப்புக்கு அழைப்பு விடுத்துள்ளார். இந்த செய்தியாளர்கள் சந்திப்பு இன்று காலை 11 மணிக்கு நடைபெற உள்ளது. இந்த சந்திப்பின் போது காங்கிரஸ் கட்சி தயாரித்துள்ள இந்தியாவில் கொரோனா தாக்கம் குறித்த வெள்ளை அறிக்கையைக் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வெளியிட உள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

இந்திய ஐரெக் பயிற்சிபெற்ற இலங்கையர்கள் அமைப்பு கொழும்பில் அங்குரார்ப்பணம் !

இந்தியா வெளிவிவகார அமைச்சின் தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புத் திட்டத்தின் கீழ்...

உலக முட்டை தினம்: நாவிதன்வெளியில் கர்ப்பிணிப் பெண்களுக்கு முட்டைகள் வழங்கி வைப்பு

உலக முட்டை தினத்தை முன்னிட்டு நாவிதன்வெளி அரச கால்நடை வைத்தியர் அலுவலகத்தின்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்