சினிமாவில் கதைத்திருட்டு, பெயர் திருட்டு, இசைத்திருட்டு என பல சர்ச்சைகள் எழுந்துக்கொண்டேதான் இருக்கிறது. இந்த சர்ச்சைகளுக்கு இன்றுவரை தீர்வே இல்லை என்றுதான் சொல்லவேண்டும். இத்தகைய பிரச்சனைகள் நீதிமன்றம் வரை சென்று சமரசத்திற்கு வருகிறது. இதில் பெரிய பட்ஜெட் முதல் சிறிய பட்ஜெட் படம் வரை சர்ச்சையில் சிக்கிக்கொண்டேதான் இருக்கிறது. இதுபோன்ற சர்சையில் சிக்கியுள்ளது தற்போது நடிகர் விஷால்.
து.பா.சரவணன் இயக்கத்தில் நடிகர் விஷால் நடித்து வருகிறார். விஷாலின் 31வது படமாக உருவாகும் இந்த படத்தை வி.எப்.எப் நிறுவனம் தயாரித்து வருகிறது. விஷாலுக்கு ஜோடியாக டிம்பிள் ஹயாதி நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் உருவாகும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். இந்த படத்தின் ‘நாட் காமன் பேன்’ என டைட்டிலுடன் வித்தியாசமான மோஷன் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் இந்த படத்திற்காக மோஷன் ல் போஸ்டரில் வெளியிடப்பட்ட ‘நாட் காமன் மேன்’ என்ற பெயரில்தான் சர்ச்சையே எழுந்துள்ளது. நடிகர் விஷாலுடன் நெருங்கி தொடர்பில் இருந்த உதவி இயக்குனர் விஜய் ஆனந்த் என்பவர், டைட்டிலை திருடிவிட்டதாக குற்றச்சாட்டு முன் வைத்துள்ளார். இது குறித்து விஷாலிடம் நேரடியாக முறையிட்டு அவர் கண்டுக்கொள்ளவில்லை என கூறப்படுகிறது. ஆனால் விஷால் தரப்பே நாட் காமன் மேன் என்பது ஒரு சாதாரண பெயர் என்று விஜய் ஆனந்திற்கு பலமுறை விளக்கம் கொடுத்துவிட்டோம் என கூறியுள்ளனர். இதனால் இருதரப்பினரிடையே பெரிய சர்ச்சை வெடித்துள்ளது.