நீங்கள் ஒரு இடத்தில் வீடு கட்ட வேண்டும் என்றால் எவ்வளவு காலமாகும்? ஒரு மூன்று மாதம் ஆகும். அதுவே பெரிய அப்பார்ட்மெண்ட் என்றால்? 1 வருடம் ஆகலாம் குறைந்தது 6 மாதமாவது ஆகும். ஆனால் சீனாவில் சங்ஷா என்ற கட்டுமான நிறுவனம் 10 மாடி அடுக்கு குடியிருப்பை ஒரே நாளில் கட்டி முடித்துள்ளது. ஆம் நீங்கள் வாசித்தது சரி தான் ஒரே நாளில் கட்டி முடித்துள்ளது.
இந்நிறுவனம் 10 மாடிகட்டிடம் கட்ட திட்டமிட்டது. இந்த கட்டிடத்தை வழக்கமான பாணியில் கட்டாமல் சுவர்கள், தூண்கள், தரைகள் எல்லாம் தனித்தனியாக ஒரு இடத்தில் உருவாக்கப்பட்டு இந்த கட்டிடத்தில் வைத்து பொருத்துவது போல இந்த கட்டிடம் உருவாக்கப்பட்டது. அதன் படி முன்னதாகவே திட்டமிட்டபடி இந்த கட்டிடம் தனித்தனயாக வேறு இடத்தில் உருவாக்கப்பட்டு இந்த இடத்திற்கு கொண்டு வரப்பட்டது.
ஒரே மூச்சாக இந்த கட்டிடத்தை ஒன்று சேர்க்கும் பணி நடந்தது. இந்த கட்டிடத்தை பல கிரேன்கள் கொண்டு ஒரே நேரத்தில் ஒன்று சேர்க்கப்பட்டது. ஒன்று சேர்க்க துவங்கி சரியாக 28 மணி நேரம் 45 நிமிடத்தில் இந்த கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டது.
தனித்தனியாக கொண்டு வரப்பட்ட பொருட்கள் ஒன்று சேர்க்கப்பட்டு பின்னர் அதற்கு தண்ணீர் மற்றும் கரெண்ட் கனெக்ஷன் கொடுக்கப்பட்டது. இந்த கட்டுமானப்பணி நடக்கும் போது எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் டைம் லேப்ஸ் வீடியோவாக வெளியாகியுள்ளது. 4.52 நிமிடம் ஓடும் இந்த வீடியோவை பலர் பகிர்ந்து கட்டுமானம் செய்த நிறுவனத்தை பாராட்டி வருகின்றனர்.
இதே நிறுவனம் கடந்த 2015ம் ஆண்டு இதே போல 57 மாடி கட்டிடத்தை வெறும் 19 நாட்களில் கட்டி முடித்தனர். தற்போது அவர்களே ஒரே நாளில் 10 மாடி கட்டிடத்தை கட்டி முடித்துள்ளனர். இவர்கள் இந்த கட்டிடம் 10 மடங்கு குறைவான எடையிலும் அதே நேரம் 100 மடங்கு ஸ்டாராங்காகவும் இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.