யாழ்ப்பாணம் பருத்தித்துறை கடற்பரப்பில் அனுமதிப்பத்திரமின்றி கடலட்டை தொழிலில் ஈடுபட்ட 12 வெளி மாவட்ட மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று (20) கடற்படையினர் நடத்திய சோதனையில் இவர்கள் சிக்கினர். தொழிலுக்குப் பயன்படுத்திய 4 படகுகளும் அவற்றின் வெளியிணைப்பு இயந்திரங்களும் 500 இற்கு மேற்பட்ட கடலட்டைகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.
மன்னார் மற்றும் புத்தளம் பிரதேசங்களை சேர்ந்த மீனவர்கள் 12 பேரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களிடம் கடலட்டை பிடிப்பதற்கான அனுமதிப் பத்திரம் இருக்கவில்லை என்று கடற்தொழில் நீரியல் வளத் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.



