‘கோப்ரா’ படம் வெளியாவதற்கு முன்பே கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் புதிய படம் ரிலீஸ் ஆகலாம் என்று கூறப்படுகிறது.
விக்ரம் தற்போது அஜய் ஞானமுத்து இயக்கத்தில் ‘கோப்ரா’ படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் ஸ்ரீநிதி ஷெட்டி கதாநாயகியாக நடிக்கிறார். ஏஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். கோப்ரா படத்தில் அதிகளவில் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் காட்சிகள் இடம்பெற இருக்கிறதாம். எனவே ஷூட்டிங் நிறைவடைந்துவிட்டது எனினும் கிராபிக்ஸ் காட்சிகளை முடிக்க அதிக காலம் எடுக்கும் என்று கூறப்படுகிறது.
இதற்கிடையில் விக்ரம், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ‘சீயான் 60’ படத்தில் தற்போது நடித்து வருகிறார். இந்தப் படத்தில் விக்ரமின் மகன் துருவ் விக்ரமும் நடிக்கிறார். இது இருவரும் இணைந்து நடிக்கும் முதல் படம். இந்தப் படத்தின் 50 சதவீத படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. மீதமுள்ள படப்பிடிப்புகள் ஜூலை மாதம் முதல் தொடங்கி விரைவில் முடிக்கப்பட உள்ளது. எனவே கோப்ரா படம் வெளியாவதற்கு முன்பே சீயான் 60 திரைப்படம் வெளியாகலாம் என்று கூறப்படுகிறது.
சீயான் 60 படத்தை முடித்தவுடன் விக்ரம் மணிரத்னம் இயக்கத்தில் ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் இணைய உள்ளார்.