ஒரு மாத பயணக்கட்டுப்பாடு இன்று தளர்த்தப்பட்டதை தொடர்ந்து மதுபான சாலைகளின் முன்பாக நீண்ட வரிசையில் குடிப்பிரியர்கள் காத்து நின்று மதுபானம் வாங்கிச் செல்கிறார்கள்.
பயணத்தடை விலகியதால் தொழில் நடவடிக்கையில் ஈடுபடலாம், குடும்பத்தை கவனிக்கலாம் என்ற விடயங்களிற்கு அப்பால், “தாகம் தீர்க்க முடிந்ததே“ என குடிப்பிரியர்கள் கும்மாளமிட ஆரம்பித்துள்ளனர்.
உச்சி வெயில் என்றும் பாராமல் உயிரையும் கொடுக்க தயாராக மதுச்சாலைகளின் முன்பாக நீண்ட வரிசையில் இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை காத்திருக்கிறார்கள்.
இந்த வரிசைகளை ஒழுங்குபடுத்தவே பொலிசார் கடமையில் ஈடுபட வேண்டிய நிலைமையேற்பட்டுள்ளது.
யாழ் நகரம், நெல்லியடி நகரம், வவுனியா நகரங்களில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணைக்கப்பட்டுள்ளன.


நெல்லியடி நகரம்
வவுனியா
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1