நாடு முழுவதும் பயணக் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதை தொடர்ந்து பொது போக்குவரத்து சேவைகளை மீண்டும் ஆரம்பிக்கப்படுகிறது.
புதன்கிழமை இரவு 10 மணி வரை மாகாணங்களுக்குள் பேருந்துகள் மற்றும் ரயில்களை இயக்கப்படுமென இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம கூறினார்.
இலங்கை போக்குவரத்து சபை பேருந்துகள் மற்றும் தனியார் பேருந்துகள் மாகாணங்களிற்குட்பட்ட சேவைகளில் ஈடுபடும். 17 ரயில் சேவைகளும் இயக்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.
குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பேருந்துகள் மற்றும் ரயில்கள் மட்டுமே இயக்கத்தில் இருப்பதால், பொதுமக்கள் அவற்றை அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என தெரிவித்தார்.
பொதுமக்கள் பொது போக்குவரத்தை மருத்துவமனைகள், மருந்தகங்களுக்கு செல்ல, பொருட்கள் மற்றும் சந்தைகளுக்கு அத்தியாவசிய பொருட்களை வாங்கவும் பயன்படுத்தலாம் என்றார்.
ஓய்வு அல்லது பிற அத்தியாவசியமற்ற வேலைகளுக்காக பொதுமக்கள் பயன்படுத்தக்கூடாது என்று கூறினார்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாகாண எல்லைகளை கடக்க அனுமதி வழங்கப்படவில்லை என்றும் அவர் கூறினார்.
பேருந்துகள் மற்றும் ரயில்களைப் பயன்படுத்தும் போது பொதுமக்கள் சுகாதார வழிகாட்டுதல்களையும் பின்பற்ற வேண்டும் என்று இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம குறிப்பிட்டார்.
இதேவேளை, இன்று காலை முதல் புதன்கிழமை இரவு 10 மணி வரை நான்கு மாகாணங்களில் ரயில்கள் இயக்கப்படும் என்று இலங்கை ரயில்வே தெரிவித்துள்ளது.
பிரதான பாதையில் ஆறு ரயில் பயணங்கள், கரையோரப் பாதையில் நான்கு, களனி பாதையில் நான்கு மற்றும் புத்தளம் பாதையில் மூன்று ரயில்கள் இயக்கத்தில் இருக்கும்.
பிரதான பாதையில், மூன்று ரயில்கள்- அம்பேபுச- மிரிகம, வெயாங்கொட, கம்பஹாவிற்கிடையில் செயற்படும்.
கரையோரப் பாதையில் உள்ள அளுத்கம ரயில் நிலையத்திலிருந்து நான்கு ரயில் பயணங்கள் தொடங்கும், அதே நேரத்தில் களனி பாதையில் உள்ள பாதுக மற்றும் அவிசாவளை நிலையங்களில் இருந்து தலா இரண்டு பயணங்கள் தொடங்கும்.
நீர்கொழும்பு நிலையத்திலிருந்து இரண்டு ரயில்களும், புத்தளம் பாதையில் கொச்சிக்கடை நிலையத்திலிருந்து ஒரு ரயில்களும் புறப்படும்.
வெயாங்கொட மற்றும் மிரிகம நிலையங்களிலிருந்து பாணந்துறை நிலையத்திற்கும் இரண்டு ரயில்கள் புறப்படும்.
கண்டி, பொல்கஹவெல மற்றும் அனுராதபுரம் நிலையங்களிலிருந்தும் ரயில்களும் இயக்கப்படும்.