25.8 C
Jaffna
December 13, 2024
Pagetamil
உலகம்

அமெரிக்காவில் நிகழ்ந்த பெரும் விபத்து: 15 வாகனங்கள் அடுத்தடுத்து மோதல்!

அமெரிக்காவில் நெடுஞ்சாலையில் அடுத்தடுத்து 15 வாகனங்கள் மோதி கொண்ட விபத்தில் 9 குழந்தைகள் உள்பட 10 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

அமெரிக்காவில் அலபாமா மாகாணத்தில் கிளாடிட் புயல் பாதிப்பினால் தென்கிழக்கு பகுதியில் கனமழை பெய்துள்ளது. இந்நிலையில், கைவிடப்பட்ட அல்லது துன்புறுத்தலுக்கு ஆளான பள்ளி மாணவர்கள் உள்பட பலருக்கு அடைக்கலம் அளிக்கும் காப்பக நபர்களை சுமந்து கொண்டு பேருந்து ஒன்று சென்றுள்ளது.

அந்த பேருந்து நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் 15 வாகனங்கள் அடுத்தடுத்து மோதி பெரும் விபத்துக்குள்ளாகின. இந்த சம்பவத்தில் பேருந்தில் இருந்த 8 குழந்தைகள் கொல்லப்பட்டனர். அவர்கள் அனைவரும் 4 முதல் 17 வயதுக்கு உட்பட்டவர்கள்.

இதேபோன்று மற்றொரு வாகனத்தில் இருந்த 29 வயது நபர் மற்றும் அவரது 9 மாத கைக்குழந்தை ஆகியோரும் உயிரிழந்து உள்ளனர். இதனால் விபத்தில் மொத்தம் 10 பேர் பலியாகி உள்ளனர். இதனை தொடர்ந்து அலபாமாவின் கிழக்கு மத்திய பகுதியில் நோடாசுல்கா என்ற இடத்தில் உள்ள உயர்நிலை பள்ளியில் பொதுமக்கள் திரளாக கூடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆதரவாக ஆறுதல் மற்றும் ஆலோசனைகளையும் வழங்கினர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

தென்கொரியாவின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் தற்கொலை முயற்சி

Pagetamil

எல் சால்வடாரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

east pagetamil

சிரியா ஜனாதிபதி மொஸ்க்கோவில் தஞ்சம்

east pagetamil

14 வயது சிறுவனால் வரையப்பட்ட ஓவியம் – கவிழ்க்கப்பட்டது சிரியா ஆட்சி

east pagetamil

சிரியா முன்னாள் ஜனாதிபதி அசாத் பற்றிய மர்மம் விலகியது: ரஷ்யா புகலிடம் அளித்துள்ளது!

Pagetamil

Leave a Comment