25.8 C
Jaffna
December 22, 2024
Pagetamil
லைவ் ஸ்டைல்

வெங்காயம் உரிச்ச தோலை தூக்கி வீசாதீங்க!

வெங்காயம் சமையலில் பயன்படுத்தப்படும் ஒரு முக்கியமான பொருள் என்பது நம் அனைவருக்குமே தெரியும். வெங்காயத்தில் ஏகப்பட்ட ஊட்டச்சத்துக்கள் உள்ளன; மற்றும் இது பல மருத்துவ குணங்களால் நிரம்பி உள்ளது. அதே மாதிரி நாம் வீணாக கீழே போடும் வெங்காய தோல் கூட நமக்கு பல வழிகளில் உதவக்கூடும். ஆகையால், வெங்காயத் தோலை தூக்கி எறிவதை முதலில் நிறுத்துங்கள். மேலும், அவற்றை நீங்கள் எவ்வாறு திறம்பட பயன்படுத்தலாம் என்பது இங்கே இந்த பதிவில் கொடுக்கப்பட்டு உள்ளது. வாருங்கள் தெரிந்து கொள்வோம்.

​1. நீங்கள் ஏன் வெங்காயத் தோலை தூக்கி எறியக்கூடாது?

வெங்காயத் தோலின் பயன்கள்! | www.theevakam.com

வெங்காயம் என்பது நமது அன்றாட சமையலின் ஒரு மிகச்சிறந்த பகுதியாகும். ஆனால், வெங்காயத்தைப் பயன்படுத்தும் போது, நாம் பெரும்பாலும் வெளிப்புறத் தோலை நீக்குவது உண்டு. இவ்வாறு தோலை நீக்கிய வெங்காயத்தை தான் நாம் சமையலில் பயன்படுத்துவோம். ஆனால், நீங்கள் ஆச்சரியப்படும் வகையில், வெங்காயத் தோல்கள் உங்கள் அன்றாட வாழ்க்கையில் அதிசயங்களைச் செய்யலாம். உங்களின் உணவுகளுக்கு ஒரு தனித்துவமான சுவையைச் சேர்ப்பது முதல், உங்கள் கூந்தலுக்கு சரியான பிரகாசத்தை அளிப்பது வரை, இந்த வெங்காயத் தோலானது உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். எனவே, நீங்கள் வெங்காயத் தோலை தூக்கி எறிவதை இப்போதே நிறுத்துங்கள். உங்கள் வாழ்க்கையை எளிதாக்கும் சில அற்புதமான ஹேக்குகள் எங்களிடம் உள்ளது. வாருங்கள் அவற்றை படித்து தெரிந்து கொள்ளலாம்.

​2. நரை முடிக்கு வெங்காயத் தோல்

நரை முடிக்கு வெங்காயத் தோல் உதவக்கூடும். ஆனால், இந்த அற்புதமான ஹேக் மூலம், வெறும் சில நிமிடங்களில் உங்கள் நரை முடியை வண்ணமயமாக்கி சரிசெய்ய முடியும். இதற்கு, இரண்டு முதல் மூன்று வெங்காயம் போதுமானது. முதலில் அந்த வெங்காயத்தின் தோலை உரித்து எடுத்துக் கொள்ளவும். இந்த இயற்கையான கூந்தல் நிறத்தை உருவாக்க, ஒரு இரும்பு பாத்திரம் அல்லது கடாய் எடுத்துக் கொள்ளுங்கள். அந்த கடாய்யை நடுத்தர தீயில் சிறிது சூடாக்கி கொள்ளவும்; பின்பு அதில் வெங்காயத் தோல்களைச் சேர்க்கவும். இதனை, நடுத்தர முதல் உயர் தீயில், வெங்காயத்தின் தோல்கள் கருகும் வரை நன்றாக வதக்கவும். பின்னர், அடுப்பை அணைத்துவிட்டு இதனை நன்றாக பொடியாக்கி கொள்ளவும்; அல்லது கையால் நசுக்கி ஒரு சல்லடை மூலம் கூட நீங்கள் சலித்து எடுத்துக் கொள்ளலாம். வெங்காய தோலால் தயாரிக்கப்பட்ட இந்த பொடியை கற்றாழை ஜெல் அல்லது ஹேர் ஆயிலுடன் கலந்து உங்கள் தலையில் தடவலாம். இந்த ஹேர் டை ஆனது, உங்கள் முடிக்கு உடனடியாக நிறத்தை கொடுப்பதற்கு ஒரு சரியான தீர்வாக இருக்கும். இருப்பினும், ஒன்று அல்லது இரண்டு முறை உங்களை தலையை அலசினால் இந்த நிறம் ஆனது மங்கக்கூடும்.

​3. ஒரு சரியான சுவையூட்டும் பொருள்

வெங்காய தோல் ஆனது, ஒரு சுவையூட்டும் பொருளாக திகழ்கிறது. உலர்ந்த அல்லது வறுத்த வெங்காயத் தோலின் தூளை உங்கள் உணவுகளில் (சூப்கள், வேகவைத்த காய்கறிகள் மற்றும் இறைச்சிகள், மற்றும் வீட்டில் தயாரிக்கப்பட்ட ரொட்டிகள் போன்றவை) சேர்ப்பது, உங்கள் உணவின் சுவையை அதிகரிக்க உதவும்.

​4. வலியில் இருந்து நிவாரணம் பெற வெங்காய தேநீர் அருந்துங்கள்

நீங்கள் தசை வலி அல்லது உடல் வலி ஆகியவற்றால் அவதிப்பட்டால், வெங்காய தோல் கொண்டு தயார் செய்யப்பட்ட தேநீரை குடிக்கலாம். ஏனெனில், உங்கள் வலியைக் குணப்படுத்த இந்த தேநீர் உங்களுக்கு உதவும். சிறிது வெங்காயத் தோலை எடுத்து அதை தண்ணீருடன் சேர்த்து நன்றாக கொதிக்கவிடவும்; தேநீர் நன்றாக கொதித்த பின்னர், இதை வடிகட்டி எடுத்து கொள்ளுங்கள். இந்த வடிகட்டிய தேநீரை, நீங்கள் படுக்கைக்கு செல்வதற்கு முன் குடிக்கலாம். இவ்வாறு செய்வது, உங்கள் தசை வலியை போக்க உதவும்.

​5. தூக்கத்திற்கு வெங்காயத் தோல் எவ்வாறு உதவுகிறது?

தூக்கத்திற்கு வெங்காயத் தோல் உதவக்கூடும் என்பது பலருக்கும் ஆச்சரியமாகத் தோன்றலாம். ஆனால், வெங்காயத் தோல் கொண்டு ஒரு எளிய தேநீர் தயாரிப்பது உண்மையில் உங்கள் தூக்கத்தைத் தூண்டும். இது, எல்-டிரிப்டோபன் இன் நன்மையால் நிரம்பி உள்ளது. எல்-டிரிப்டோபன் என்பது அமினோ அமிலத்தின் ஒரு வடிவம் ஆகும். இது ஒரு இயற்கையான மயக்க மருந்து போல வேலை செய்கிறது. எனவே, வெங்காய தோல் கொண்டு தயாரிக்கப்படும் இந்த எளிய தேநீர் ஆனது, உண்மையில் தூக்கத்தைத் தூண்டும். அது மட்டுமின்றி, உங்கள் நரம்புகளை குணப்படுத்தவும் இது உதவுகிறது.

​6. வெங்காயத் தோல் ஹேர் டோனர்

 

உங்கள் தலைமுடி உலர்ந்து அல்லது வறண்டு போய் காணப்படுகிறதா? அல்லது அதிகப்படியான முடி உதிர்வை நீங்கள் எதிர்கொள்கிறீர்களா? இனி கவலை வேண்டாம்! வெங்காயத் தோல் கொண்டு தயார் செய்யப்பட்ட இந்த ஹேர் டோனர் உங்கள் தலைமுடிக்கு நீங்கள் பயன்படுத்தலாம். இது உங்கள் தலைமுடிக்கு அதிசயங்களைச் செய்யக்கூடும். வெங்காயம் கந்தகத்தால் (சல்பர்) நிரம்பி உள்ளது. இது முடி வளர்ச்சிக்கு உதவுகிறது மற்றும் முடி உதிர்வதை தடுக்கவும் உதவுகிறது. இந்த ஹேர் டோனரை உருவாக்க உங்களுக்கு சில வெங்காய தோல்கள் மட்டுமே போதுமானது. வெங்காயத் தோலை தண்ணீரில் நன்றாக கொதிக்க வைக்கவும்; இந்த கலவை பழுப்பு நிறமாக மாறியதும், அடுப்பை அணைத்து இதை வடிகட்டி எடுத்து கொள்ளவும். பின்னர், இதை ஒரு பாட்டிலில் சேமித்து வைத்து கொள்ளுங்கள். தேவைப்படும் பொழுது இதை உங்கள் உச்சந்தலையில் நீங்கள் பயன்படுத்தலாம். இதை பயன்படுத்திய பிறகு நீங்கள் மாற்றத்தைக் காணலாம்.

​7. தாவரங்களுக்கு ஒரு சிறந்த உரம்

வெங்காயத் தோல்களை ஒரு பெரிய தொட்டியில் சேமித்து வைத்துக் கொள்ளுங்கள். இது ஒரு இயற்கையான உரமாக மாறிவிடும். இந்த உரத்தில் ஊட்டச்சத்துக்கள் நிரம்பி இருக்கும். மேலும், வீட்டில் தயார் செய்யப்பட்ட இந்த உரமானாது உங்கள் தாவரங்களின் வளர்ச்சிக்கு மிகவும் உதவியாக இருக்கும்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

வரும் காதலர் தினத்தில் உங்கள் காதலை முன்மொழிய வெற்றிகரமான சூத்திரம் இதுதான்!

Pagetamil

கோழி இறைச்சியை சமைப்பதற்கு முன் கழுவக்கூடாதா?

Pagetamil

பருவமடைந்த, பிரசவித்த பெண்களுக்கான பிரத்யேக உணவுகள்!

Pagetamil

கணவாய் வறுவல்

Pagetamil

வெங்காயத் தாளில் 10 விதமான ரெசிப்பி!

Pagetamil

Leave a Comment