தமிழில் முன்னணி நடிகையாக இருந்த நடிகை த்ரிஷாவின் நடிப்பில் உருவாகி வெளியான திரைப்படம் ‘பரமபத விளையாட்டு’. 24 ஹவர்ஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவான இப்படத்தை திருஞானம் இயக்கினார். சஸ்பென்ஸ் த்ரில்லராக உருவான இப்படம் கடந்த ஏப்ரல் மாதம் ஓடிடியில் வெளியானது. இந்த படத்தையடுத்து ‘பொன்னியின் செல்வன்’. ‘கர்ஜனை’, ‘சதுரங்க வேட்டை 2’ உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.
இதைத்தொடர்ந்து திரிஷாவின் நடிப்பில் ஆக்ஷன் த்ரில்லராக உருவாகியுள்ள படம் ‘ராங்கி’. அப்படியென்றால் அடங்காத, துணிச்சல் மிகுந்த பெண் என்று பொருள். இப்படத்தை ’எங்கேயும் எப்போதும்’ படத்தின் இயக்குனர் எம்.சரவணன் இயக்கியுள்ளார். லைகா நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படத்தின் திரைக்கதையை இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் எழுதியுள்ளார்.
இந்த படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து இறுதிக்கட்ட பணிகள் முடிவுற்று ரிலீசுக்கு தயாராக உள்ளது. இந்த திரைப்படத்தை ஓடிடியில் வெளியிட பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது. இந்நிலையில் ‘ராங்கி’ படம் நேரடியாக சன் டிவியில் வெளியாக உள்ளது. இதற்கான நடைபெற்ற பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்பட்டுள்ளது. விரைவில் படம் வெளியாகும் திகதி அறிவிக்கப்படும் என தெரிகிறது.