வைத்தியசாலை பறிப்பை தடுத்து நிறுத்துங்கள்: வடக்கு ஆளுனருக்கு அவைத்தலைவர் கடிதம்!

Date:

மாகாண நிர்வாகத்திற்குட்பட்ட வைத்தியசாலைகளை மத்திய அரசு பிடுங்கியெடுப்பது அரசியலமைப்பிற்கு முரணானது என்பதை, வடக்கு ஆளுனருக்கு கடிதம் மூலம் சுட்டிக்காட்டியுள்ளார் வடமாகாண அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம்.

மாகாண வைத்தியசாலைகளை மேலும் வினைத்திறனாக்க மத்திய அரசு முயற்சித்தால், அதற்கான நிதியை மாகாண நிர்வாகத்திற்கு ஒதுக்கட்டும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது தொடர்பில் அவர் அனுப்பி வைத்துள்ள கடிதத்தில்-

வடக்கு மாகாண சபையின் நிர்வாகத்திற்குட்பட்ட மன்னார், வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலைகள் மத்திய சுகாதார அமைச்சின் நேரடி நிர்வாகத்தின் கீழ் கொண்டு செல்வதற்கான தீர்மானம் எடுகப்பட்டிருப்பதாக ஊடகச் செய்திகள் மூலம் அறியப்படுகின்றது.

இந்த விடயம் தொடர்பான எமது ஆட்சேபனையையும் அதிருப்தியையும் தெரிவிப்ப தோடு இது மாகாண சபைகளுக்கு சட்டரீதியாக வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை மீறுவதாக அமைகிறது என்பதை பதிவு செய்துள்ள விரும்புகின்றேன்.

இந்த விடயத்தில் இந்த நாட்டின் அரசியலமைப்பின்படி மாகாண சபைகள் நியதிச் சட்டம் இயற்ற அதிகாரமளிக்கும் ஒன்பதாவது அட்டவணையின் நிரல் I இன் 11:1 பந்தியின் பின்வரும் ஏற்பாடுகளுக்கு தங்கள் அவதானத்தைக் கோர விரும்புகின்றுன்.

“(போதனா வைத்தியசாலைகளும் விசேட நோக்களுங்களுக்காகத் தாபிக்கப்பட்ட மருத்துவமனைகளும் தவிர) பொது மருத்துவமனைகளையும் கிராம மருத்துவமனை களையும் மகப்பபேற்று மருத்துவமனைகளையும் மருந்தகங்களையும் தாபித்தலும் பேணுதலும்”

இதன்படி போதனா வைத்தியசாலைகள் மற்றும் விசேட நோக்கங்களுக்கான வைத்தியசாலைகள் தவிர்ந்த ஏனைய வைத்தியசாலைகள் யாவும் மாகாண சபை களின் நிர்வாகத்திற்குட்பட்டவையாகும்.

இந்த ஏற்பாட்டின் மூலம் வழங்கப்பட்ட அதிகாரத்திற்கமைய வடக்கு மாகாண சபையானது அதனது 12.01.2016 ஆம் திகதிய அமர்வில் நிறைவேற்றிய 2015 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்க சுகாதார சேவைகள் நியதிச் சட்டம் 08.02.2016 ஆம் திகதி கௌரவ ஆளுநரின் சம்மதம் கிடைக்கப் பெற்று சட்டமாக அமுலில் உள்ளது.

இந்த நியதிச் சட்டத்தின் பிரிவு 3 (அ) இன் கீழான அட்டவணை I இன்படி கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைகள் வட மாகாண சபையின் மாவட்ட பொது வைத்தியசாலைகளாக உள்ளடக்கப்பட்டுள்ளன. யாழ்ப் பாணம் மாவட்டம் இதில் உள்ளடக்கப்படாத காரணம் இம் மாவட்டத்தில் போதனா வைத்தியசாலை ஏற்கனவே இயங்கி வந்தமையே

இந்த நிலையில் மேற்குறிப்பிட்ட மாவட்ட பொது வைத்தியசாலை எதையும் மாகாண சபையிடமிருந்து மத்திய சுகாதார அமைச்சு கையேற்பது அரசியலமைப் புக்கும் மாகாண சபையின் நியதிச் சட்டத்திற்கும் முரணானதாகும்.

இந்த மாவட்ட வைத்தியசாலைகளின் சேவைகளிலும் வசதிகளிலும் குறைபாடுகள் காணப்படுவதாலேயே இந்தத் தீர்மானம் எடுக்கப்படுவதாயின் அதற்கான தீர்வு இவை களை மத்திய மயப்படுத்துவதல்ல. அக்குறைபாடுகளை நீக்குவதற்கான நடவடிக்கை களை மாகாண நிர்வாகம் ஊடாக மேற்கொள்வதே பொருத்தமானதாகும்.

நிர்வாகம் மத்திய சுகாதார அமைச்சின் கீழோ அல்லது மாகாண சபை நிர்வாகத்தின் கீழோ இருந்தாலும் அநேகமாக அதே ஆளணியினரே செயற்படுவர் என்பது தெளிவு. ஏனெனின் வைத்தியத்துறை சார்ந்த சகல அதிகாரிகளும் மத்திய சுகாதார அமைச்சி னால் நியமிக்கப்படுவதுடன் அவர்களது ஒழுங்குக் கட்டுப்பாடும் அதனிடமே உள்ளது.

உண்மையாக இவ் வைத்தியசாலைகளுக்குத் தேவை உட்கட்டுமான மேம்படுத்தலும் பொருத்துமான நிபுணத்துவ வைத்தியர்களுமே. இவற்றை நிறைவேற்றுவதற்கான போதிய நிதியை மாகாண நிர்வாகத்திற்கு வழங்குவதன் மூலம் சகல குறை பாடுகளும் நிவர்த்திக்கப்படலாம் என்பதே எமது நிலைப்பாடாகும் என்பதை வலி யுறுத்திக் கூற விரும்புகிறோம்.

மாகாண நிறைவேற்று அதிகாரியாகவுள்ள சிரேஷ்ட நிர்வாகியாகிய தாங்கள் இவற்றின் மேம்படுத்தலுக்கான நிதியை மாகாண சபை நிர்வாகத்திற்கு வழங்கினால் இனங்காணப்படும் குறைபாடுகளை நிர்வதிக்கும் ஆற்றல் தங்களுக்கு உண்டு என்பதை உயர் மட்டத்திற்கு சுட்டிக்காட்டி இந்த முடிவை மீளாய்வுக்குட்படுத்தி நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் தங்களை அன்புடன் வேண்டுகின்றேன் என தெரிவித்துள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

கழிவு அகற்றும் உழவு இயந்திர பெட்டியில் பாதையாத்திரைகளுக்கான உணவு பொருட்கள் எடுத்துச் சென்ற வழங்கிய மட்டு மாநகர சபை

கதிர்காமம் புனித பாதை யாத்திரைகளுக்கு  காட்டுப்பகுதியில் செல்பவர்களுக்கு மட்டக்களப்பு மாநகரசபையின் குப்பை...

மியான்மர் கடற்கரையில் இரு அகதி படகுகள் மாயம்: 500-க்கும் மேற்பட்டோர் காணாமல் போனதாக ஐ.நா. தகவல்

மியான்மரில் நிலவும் வன்முறையிலிருந்து தப்பிச் சென்ற ரோஹிங்கியா அகதிகளை ஏற்றிச் சென்ற...

நிந்தவூர் பிரதேசத்தில் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்

நிந்தவூர் மத்திய வட்டாரத்தை உள்ளடக்கிய நிந்தவூர் 03 மற்றும் 15ஆம் பிரிவுகளில்,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்