கடின உழைப்பிற்கு என்றும் தோல்வியில்லை. இது பழமொழி. கடினமாக ஒருவர் உழைக்கிறார் என்றால் அவருக்கு தோல்வி என்பதே வராது என்றும் வெற்றி தான் என்பது இதன் பொருள். இந்த பழமொழி பல நேரங்களில் உண்மையாகியுள்ளது. கடினமாக உழைக்கும் நபர் கட்டாயம் வெற்றி பெற்று இந்த பழமொழியை உண்மையாக்கியுள்ளார்.
இப்படியான வீடியோ ஒன்று தற்போது சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. கேரள மாநிலத்தில் எடுக்கப்பட்ட இந்த வீடியோவிஒல் ஒருவர் தனி ஆளாக கிணறு வெட்டிக்கொண்டிருக்கிறார். கிணறு வெட்டுவது என்பது மிக கடினமான வேலை. பொதுவாக கிணறு வெட்ட 3-4 ஆட்கள் வேலை செய்ய வேண்டும். அப்பொழுது தான் கிணறு சீக்கிரமாகவும், சரியாகவும் வெட்டப்படும். ஆனால் இந்த வீடியோவில் ஒருவர் அவரே கிணறு வெட்டி, கிணறு வெட்டிய மண்ணை அவரே கிணற்றிகுள் இருந்தபடியே வெளியே மண்ணை போடுகிறார். பார்ப்பதற்கே இது ஆச்சரியமாக இருக்கிறது.
A young man single handedly digs a well , including lifting the soil and dumping it on the side somewhere in Kerala . Ingenuity at it's best. Video : From friends. #groundwater pic.twitter.com/TU8EiTR6ag
— zenrainman (@zenrainman) June 15, 2021
இந்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. பலர் இந்த வீடியோவை பகிர்ந்து தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். இந்த வீடியோ பலருக்கு ஊக்கமளிக்கப்பதாக தெரிவித்துள்ளனர்.