வடக்கில் வரையறுக்கப்பட்ட திருமண நிகழ்வுகளிற்கு வழங்கப்படும் அனுமதியை தற்காலிகமாக நிறுத்த சுகாதாரத்துறை அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தமிழ்பக்கம் அறிகிறது.
வடமாகாண ஆளுனரினால் விடுக்கப்பட்ட பணிப்புரைக்கமைய, சுகாதார அதிகாரிகள் இந்த தீர்மானத்தினை மேற்கொண்டுள்ளனர்.
அண்மைக்காலமாக திருமணங்கள் மூலமாகவே கொரோனா பரவல் ஏற்பட்டுள்ளதையடுத்து இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தமிழ்பக்கம் அறிகிறது.
திருமண நிகழ்வுகளிற்கு மணமக்கள் உள்ளிட்ட 15 பேருக்கு சுகாதாரத்துறையினர் அனுமதி வழங்கி வருகிறார்கள். எனினும் அனேகமான சந்தர்ப்பங்களில் இந்த வாய்ப்பை துஷ்பிரயோகம் செய்கிறார்கள். திருமண வீட்டில் சிக்கிய பலர் என்பது அன்றாட செய்தியாகி விட்டது.
அண்மையில் திருமண வீடுகளில் இரகசியமான பெருமளவானவர்கள் கூடிய சந்தர்ப்பங்களில் கொரோனா பரவல் கண்டறியப்பட்டுள்ளது.
இதையடுத்தே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. பயணத்தடை நீக்கப்படும் வரை இந்த தீரமானம் நடைமுறையில் இருக்கும்.