25.4 C
Jaffna
March 4, 2025
Pagetamil
இலங்கை

மடு மாதா ஆலய பக்தர்களிற்கு விசேட சலுகையா?; ஏனைய ஆலயங்களின் கட்டுப்பாடு பொருந்தாதா?: புதிய சலசலப்பு!

மன்னார் மடு மாதா ஆலயத்திற்கு சிறப்பு சலுகை வழங்கப்பட்டுள்ளதா என சமூக ஊடகங்களில் விவாதம் எழுந்துள்ளது. ஏனைய மத ஆலயங்களில் கிடுக்குப்பிடி பிடித்து, கூட்டமாக கூடியவர்கள் கொத்தாக சிக்கினர் என புகைப்படமும் வெளியாகி வரும் நிலையில், மடு மாதா ஆலயத்திற்கு மட்டும் விசேட சலுகை வழங்கப்பட்டுள்ளதா என கேள்வியெழுப்பப்பட்டு வருகிறது.

எந்த மதம் சக்தி வாய்ந்தது? குறிப்பிட்ட ஒரு மதத்திற்குள்ளேயே எந்த ஆலயம் சக்தி வாய்ந்தது என்பதையொட்டிய விவகாரமல்ல இது. அனைத்து மத வழிபாட்டிடங்களிலும் கொரோனா பரவி வருகிறது. நாடுகளின் தலைவர்கள் தொடக்கம் சாதாரண மக்கள் வரை யாரையும் கொரோனா விட்டு வைக்கவில்லை.

கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில், பயணக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டு, ஆலய வழிபாடுகளிற்கும் இறுக்கமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. நயினாதீவு நாகபூசணி அம்மன ஆலயத்தில் 15 பேருக்கு மாத்திரமே அனுமதியளிக்க முடியுமென வடக்கு சுகாதாரத்துறை கறார் காட்டியதால், ஆலய திருவிழாவே கைவிடப்பட்டது.

சுகாதாரத்துறையின் இந்த கறார் நடவடிக்கைக்கு அனைத்து தரப்பினரும் ஆதரவளித்தனர். இப்படியான இறுக்கமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டால் மாத்திரமே கொரோனா பெருந்தொற்றை கட்டுக்குள் கொண்டு வரலாமென்பதால் எல்லோரும் அதை ஆதரித்தார்கள்.

வரும் 2ஆம் திகதி மடு மாதா ஆலய வருடாந்த திருவிழா திருப்பலி இடம்பெறவுள்ளது. இதில் வெவ்வேறு தடவைகளில் 150 பக்தர்கள் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளனர். மன்னார் சுகாதாரத்துறையினர் எடுத்த இந்த முடிவினால், வடக்கு சுகாதாரத்துறைக்குள்ளும் சலசலப்பு உருவாகியுள்ளதாக அறிய முடிகிறது.

இந்த விவகாரம் சமூக ஊடகங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது. வடக்கில் கறாரான நடவடிக்கையெடுத்த சுகாதார வைத்திய அதிகாரிகள் சிலரின் பெயர் குறிப்பிட்டும், நெட்டிசன்கள் கேள்வியெழுப்பி வருவதை அவதானிக்க முடிகிறது.

“எங்கள் வழிபாட்டிடங்களில்தான் நீங்கள் கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கையெடுப்பீர்களா? 30 பேர் கூடியதற்கே எமக்கு நடவடிக்கையெடுத்தீர்களே?“ என சுட்டிக்காட்டி வருகிறார்கள்.

அன்றைய தினம் மடு மாதா ஆலயத்தில் 5 நேர திருப்பலிகள் ஒப்புக் கொடுக்கப்படவுள்ளது. ஒவ்வொரு நேரத்திலும், மன்னாரின் ஒவ்வொரு பங்கை சேர்ந்த 30 பேர் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளனர். அன்றைய தினம் பக்தர்கள் மட்டும் 150 பேருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதே சலுகை வடக்கில் வேறெந்த பிரதேசத்திலுமுள்ள பிற வழிபாட்டிடங்களிற்கு வழங்கப்படவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.

தமது பெயர் குறிப்பிட விரும்பாத சில சுகாதாரத்துறை அதிகாரிகள், இந்த நடவடிக்கைகளால் தாம் அதிருப்தியடைந்துள்ளதாக தமிழ்பக்கத்திடம் தெரிவித்தனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

தந்தை செலுத்திய உழவு இயந்திரத்தில் சிக்கி 11 வயது மகன் பலி

Pagetamil

கொழும்பிலிருந்து நிர்வாணமாக மோட்டார் சைக்கிளில் வந்தவர் கைது!

Pagetamil

யாழில் பெருந்தொகை கஞ்சா மீட்பு!

Pagetamil

தேடப்படும் தென்னக்கோன் இன்று சட்டத்தரணி ஊடாக சரணடையலாம்?

Pagetamil

இலஞ்சம் வாங்கிய இரு பொலிசார் கைது!

Pagetamil

Leave a Comment