தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக உள்ள எஸ்.ஜே.சூர்யா, ‘வாலி’ படத்தின் இயக்குனராக அறிமுகமானவர். அதன்பிறகு விஜய்யை வைத்து ‘குஷி’ படத்தை இயக்கி மாபெரும் வெற்றிப்பெற்றார். பின்னர் ‘நியூ’ உள்ளிட்ட சில படங்களை அவரே இயக்கி நடித்தார். ஆனால் அந்த படங்கள் எஸ்.ஜே.சூர்யாவுக்கு பெரிய அளவில் கைக்கொடுக்கவில்லை. இதைத்தொடர்ந்து நடிகராக அறிமுகமாகி கலக்கி வருகிறார். மெர்சல், நெஞ்சம் மறப்பதில்லை போன்ற படங்களில் வில்லனாக நடித்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். மான்ஸ்டர் படத்தில் எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பு அனைவரின் பாராட்டை பெற்றது.
தற்போது முன்னணி இயக்குனர் ராதாமோகன் இயக்கத்தில் ‘பொம்மை’ படத்தில் நடித்துள்ளார் எஸ்.ஜே.சூர்யா. நடிகை பிரியா பவானி சங்கர் கதாநாயகியாக நடித்துள்ளார். சைக்கோ த்ரில்லர் படமாக உருவாகியுள்ள இப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். விரைவில் ரிலீசாக உள்ள இப்படத்தின் இறுதிக்கட்ட தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் ‘பொம்மை’ படத்தின் டிரைலர் எப்போது வெளியாகும் என்ற சூசக தகவலை எஸ்.ஜே.சூர்யா வெளியிட்டுள்ளார். இதுகுறித்து ரசிகர்களுடன் சமூக வலைத்தளத்தில் உரையாடியுள்ள தகவல் என்னவென்றால், விரைவில்.. கொரானா ஊடரங்கு தளர்வு அடுத்த மாதத்துடன் முடியும் என நம்புவோம். சூழ்நிலை மாறி வரும் நிலையில் ஜூலையில் ‘பொம்மை’ படத்தின் டிரைலர் வெளியாகும் திகதி உள்ளிட்ட மற்ற விபரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளார். இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.