முதியவரை மிரட்டி, நிர்வாண வீடியோ எடுத்து பணம் பறிக்க முயன்ற 3 இளம் பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஹரியானா மாநிலம், யமுனா நகரில் புது ஹமிதா காலனியில் இந்த சம்பவம் நடந்தது.
அந்த பகுதியிலுள்ள முதியவர் ஒருவருக்கு ஒரு மகன், ஒரு மகள் இருக்கிறார்கள்.
மகன் வெளிநாட்டில் வேலை பார்க்கிறார்.. கல்யாணம் ஆகி மகளும் மாமியார் வீட்டுக்கு சென்றுவிட்டார். இதனால் இந்த வயதானவர் மட்டும் தனியாகவே வீட்டில் வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில், 3 பெண் போலீசார் திடீரென முதியவர் வீட்டுக்குள் நுழைந்துள்ளனர். முதியவரின் ஆடைகளை கழட்டுமாறும் மிரட்டி உள்ளனர்..
இறுதியில் அவரை நிர்வாணமாக வீடியோ எடுத்துவிட்டு, பணம் வேண்டும் என்று கேட்டுள்ளனர். 5 லட்சம் ரூபாய் பணத்தை தரவில்லையானால், வீடியோவை வெளியிட்டுவிடுவோம் என்று மிரட்டி இருக்கிறார்கள்.
இதனால் பயந்துபோன முதியவர், 50 ஆயிரம் ரூபாயை கொடுத்துள்ளார். முதல் தவணையாக வைத்து கொள்கிறோம், மீண்டும் வருவோம் என்று சொல்லிவிட்டு 3 பேரும் கிளம்பி விட்டனர்..
இந்த சம்பவம் தொடர்பாக யமுனா நகர் போலீசில் முதியவர் புகார் அளித்தார்.
முதலில் வீட்டிற்குள் ஒரு பெண்தான் போலீஸ் உடையில் வந்திருக்கிறார். அதையடுத்து 5 நிமிஷத்தில் மற்ற 2 பெண்களும் போலீஸ் உடையில் வந்து மிரட்டினார்கள்.
முதலில் நுழைந்த பெண்ணுடன் தவறாக நடக்க முயன்றதாக சத்தமிடப் போவதாக மிரட்டியே அவரது ஆடைகளை களைய வைத்தனர்.
3 பெண்களும் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.