ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக, அந்த கட்சியின் தலைவர் ரனில் விக்கிரமசிங்கவின் பெயர் குறிப்பிட்டு வர்த்தமானி வெளியாகியுள்ளது.
தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர்கள் இன்று கூடிய பின்னர், இதற்கான அறிவித்தல் அரச அச்சு கூட்டுத்தாபனத்திற்கு வழங்கப்பட்டதை தொடர்ந்து வர்த்தமானி வெளியானது.
அத்துடன், 2020 வாக்காளர் பதிவேட்டின் படி தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் எண்ணிக்கையை நிர்ணயிக்கும் வர்த்தமானி அறிவிப்பை வெளியிட தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.