அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ட்ரம்ப், ருவிற்றரில் மீண்டும் ட்ரெண்டாகிக் கொண்டிருக்கிறார். காரணம் அவரைப்போலவே தோற்றம் கொண்ட குல்ஃபி வியாபாரி.
அமெரிக்காவின் 45வது ஜனாதிபதியாக இருந்த டொனால்ட் ட்ரம்ப், பதவியேற்றதிலிருந்து ருவிற்றரில் மிகவும் பரபரப்பாக இயங்கினார். அவரது உள்நாட்டு, வெளிநாட்டுக் கொள்கைகளால் அடிக்கடி அவர் ருவிற்றர் ட்ரெண்டிங்கில் உலகளவில் முதலிடத்திற்கு வந்துவிடுவார்.
அப்படித்தான், கொரோனா தொற்று சிகிச்சையாக கிருமிநாசினியை உடலுக்குள் செலுத்தலாம் என்று டிரம்ப் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அடுத்த நிமிடமே அதை விளையாட்டாகக் கூறியதாகவும் தெரிவித்தார்.
இந்நிலையில், முன்னாள் ஜனாதிபதி ட்ரம்ப் தற்போது மீண்டும் ருவிற்றரில் ட்ரெண்டாகிக் கொண்டிருக்கிறார்.
ஆனால், இந்த முறை அந்தக் காரணம் சற்று வினோதமாகவே இருக்கிறது.
பாகிஸ்தானில் குல்ஃபி விற்கும் தொழிலாளி ஒருவர் தனது தொழிலின்போது அவர் பாட்டுப்பாடி குல்ஃபி விற்பார். இதனாலேயே அவர் அங்கு பிரபலமாக இருக்கிறார். அவருடைய வெள்ளை நிறத் தலையும் தோற்றமும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பை ஒரு நொடியேனும் நினைவுபடுத்தாமல் இருக்காது.
அவர் பாட்டுப்பாடி குல்ஃபி விற்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாக அதனாலேயே ட்ரம்ப், ருவிற்றரில் மீண்டும் ட்ரெண்டாகத் தொடங்கியிருக்கிறார். அந்த வீடியோவை பாகிஸ்தான் பாடகரும், சமூக ஆர்வலருமான ஷேசாத் ராய் பகிர்ந்திருந்தார். அதன் பிறகு அந்த வீடியோ வைரலானது. அந்த வீடியோவைப் பகிர்ந்த ஷேசாத் யாருக்காவது அவரைத் தெரிந்தால் தொடர்பு ஏற்படுத்தித் தரவும் என்றார்.
Wah. Qulfi walay bhai, Kya baat ha کھاۓ بغیر مزا آ گیا pic.twitter.com/YJeimzhboJ
— Shehzad Roy (@ShehzadRoy) June 10, 2021
அவரோ, குல்ஃபி வியாபாரியின் குரலால் ஈர்க்கப்பட்டு தேட நெட்டிசன்களோ அவருடைய தோற்றம் ட்ரம்ப்பைப் போல் இருப்பதை சுட்டிக்காட்டி ட்ரெண்டாக்குகின்றனர்.