தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையில் சிங்கமொன்று கொரொனா தொற்றிற்குள்ளாகியுள்ளதாக தென்னிலங்கை ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
2012ஆம் ஆண்டு தென்கொரியாவிலிருந்து இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட Thor என்ற ஆண் சிங்கமே தொற்றிற்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல நாட்களாக இருமல் மற்றும் தொண்டை புண்ணால் சிங்கம் பாதிக்கப்பட்டிருந்ததாகவும், இதை தொடர்ந்து நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிங்கக் கூண்டுக்கு பொறுப்பான இரண்டு பணியாளர்கள் மிருகக்காட்சிசாலையில் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதாகவும், மற்றொரு காவலர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து வனவிலங்குத்துறை இராஜாங்க அமைச்சர் விமலவீர திசானநாயக்க கருத்து தெரிவித்த போது, மிருகக்காட்சிசாலையில் ஒரு சிங்கம் நோய்வாய்ப்பட்டிருப்பது உண்மைதான் என்றாலும், பி.ஓ. சி. ஆர். சோதனை முடிவுகளில் பிழைகள் இருக்கலாம் என்பதால் இந்தியாவுடன் பேசவும் முறையான விசாரணையை நடத்தவும் மிருகக்காட்சிசாலையின் இயக்குநர்கள் குழுவுக்கு அறிவுறுத்தியதாக குறிப்பிட்டுள்ளார்.
.