ஜிப்சீஸ் இசைக் குழுவின் தலைவர் சுனில் பெரேரா தனது அனுமதியின்றி தனது பாடல்களில் ஒன்று மாற்றப்பட்டு வெளியிடப்பட்டுள்ளகாக குற்றப் புலனாய்வுத் துறையில் புகார் அளித்துள்ளார்.
பாடலின் திருத்தப்பட்ட பதிப்பு இப்போது யூடியூப்பில் பதிவேற்றம் செய்யப்பட்டு தற்போதைய அரசாங்கத்தையும் அதன் அதிகாரிகளையும் குறிவைத்ததாக கூறப்படுகிறது.
தனது அனுமதியின்றி தனது தயாரி்பை பயன்படுத்துவது தொடர்பாக விசாரணை நடத்துமாறு சுனில் பெரேரா சிஐடியிடம் கோரியுள்ளார்.
தனது பாடல்களில் அரசியல் ரீதியாக நையாண்டி வரிகள் இருந்தாலும், ஒரு குறிப்பிட்ட தனிநபரை, கட்சியை அல்லது ஒரு குழுவை குறிவைக்கவோ அல்லது புண்படுத்தவோ அவர் ஒருபோதும் பாடல்களை இயற்றவில்லை என தெரிவித்துள்ளார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1