அமெரிக்காவில் அல்சைமரால் பாதிக்கப்பட்டவர் தனக்கு திருமணமானதை மறந்து தன் மனைவியையே மீண்டும் திருமணம் செய்த சுவரஸ்யமான சம்பவம் சமீபத்தில் நடந்துள்ளது.
நீங்கள் விரும்பும் ஒரு நபர் உங்களிடம் ஒரு நாள் பேசவில்லை என்றாலே நமக்கு மிகவும் வருத்தமாக இருக்கும் அல்லவா? ஆனால் அவர் உங்களை மறந்துதேவிட்டார் என்றால்? நினைத்துக்கூட பார்க்க முடியாத விஷயம் அது அப்படி ஒரு சம்பவம் சமீபத்தில் அமெரிக்காவில் நடந்துள்ளது. ஒரு சோக சம்பவத்திலும் மிக நல்ல விஷயம் நடந்துள்ளது. அதை பற்றி காணலாம் வாருங்கள்.
அமெரிக்காவின் கனெக்டிக்கட் மாகாணத்தைச் சேர்ந்தவர் பீட்டர் மார்சல் 56 வயதான இவர் அல்சைமர் எனும் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். அல்சைமர் எனும் நோய் நமது நினைவுகளை கொஞ்சம் கொஞ்சமாக மறக்க வைக்கும். இந்த நோயால் பாதிக்கப்பட்ட இவர் கொஞ்சம் கொஞ்சமாக நினைவை இழந்து தவித்துள்ளார்.
இவரது மனைவி லீசா இவரது அல்சைமர் பிரச்சனைகளை சொல்வதற்காகவே இன்ஸ்டாகிராம் மற்றம் பேஸ்புக்கில் ஒரு பக்கத்தை பகிர்ந்து அதில் அவரது குறித்த விபரங்களை பதிவிட்டு வந்துள்ளார்.
இந்நிலையில் பீட்டருக்கு தீடிரென லீசாவுக்கு அவருக்கு திருமணமானதே மறந்துவிட்டது. லீசா தனக்கு நெருக்கமான நபர் என்று மட்டும் நினைவில் உள்ள நிலையில் இவர் மீண்டும் லீசாவிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி கேட்டுள்ளார். அதை கேட்டு மகிழ்ச்சியடைந்த லீசா தன் கணவரின் சந்தோஷத்திற்காக மீண்டும் அவரையே திருமணம் செய்ய முடிவு செய்தார்.
அதன் படி திருமண ஏற்பாடுகள் நடத்திப்பட்டு ஏற்கனவே திருமணமான தன் கணவனை மீண்டும் அதே மனைவியே திருமணம் செய்துள்ளார். இந்த புகைப்படங்களை அவர் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளா். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி பலரை கவர்ந்து வருகிறது. பலர் லீசாவின் இந்த மனதை பாராட்டி வருகின்றனர். தன் கணவர் அல்சைமர் பாதிக்கப்பட்டவராக இருந்தும் அவருடனே இருந்து அவரை பார்த்துக்கொள்ளும் மனைவி அமைவது எல்லாம் நமக்கு வரம்..