கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இன்று 10 பேர் கொரோனா தொற்றிற்குள்ளாகியுள்ளனர். பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 3 பேர் தொற்றிற்குள்ளாகியுள்ளனர்.
கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் அடையாளம் காணப்பட்ட 10 பேரில், நெல்லியடி பகுதியில் 5 பேருக்கும், கரணவாய் பகுதியில் 5 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
யாழ் மத்திய கல்லூரி ஆசிரியரின் மனைவிக்கும், கரவெட்டி கிழக்கில் மதிப்பீட்டு திணைக்களத்தின் பணிப்பாளரின் மனைவி மற்றும் பிள்ளைக்கும், மாவட்ட செயலகத்தில் பனை தென்னை நிலையத்தில் பணி புரிந்தவருக்கு ஏற்கனவே தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து அவருடன் தொடர்புபட்ட அவரின் சகோதரி, பெறாமகள் மற்றும் 10 மாத குழந்தைக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
குழந்தையின் பெற்றோரிற்கு நாளை பரிசோதனை செய்யப்படும்.
இதேபோல் கரணவாய் பகுதியில் செலிங்கோ தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்த ஒருவருக்கு ஏற்கனவே தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அவரின் கர்ப்பவதியான மனைவிக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் மேலும் 2 பேர் தொற்றிற்குள்ளாகினர். இதுவரை பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் 8 பேருக்கு தொற்று ஏற்பட்டது
அத்துடன், பருத்தித்துறை நீதிமன்றில் பணி புரிந்த ஒருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.