அண்மையில் மவுண்ட் லவ்னியா பகுதியில் சிக்கிய இணையத்தள பாலியல் விற்பனை வலையமைப்புடன் தொடர்புடைய, 26 வயது யுவதியொருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று கொழும்பு தலைமை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் சந்தேக நபர், விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
பாலியல் வியாபார வலையமைபபில் பயன்படுத்தப்பட்ட 15 வயது சிறுமி பற்றிய அதிர்ச்சி தகவல்கள் அண்மையில் வெளியாகியிருந்தது.
அந்த சிறுமியை வாடிக்கையாளர்களுக்கு கொண்டு சென்றதாக கைதான யுவதி மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்த வலையமைப்பை இயக்கிய ஆசாமி தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட சிறுமியிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர் கடந்த 04 மாதங்களில் தினசரி பல்வேறு நபர்களுக்கு விற்கப்பட்டதாக தெரிய வந்துள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1
1