குற்றவியல் புலனாய்வுத் துறையின் முன்னாள் இயக்குநர் (சிஐடி) மூத்த பொலிஸ் அத்தியட்சகர் (எஸ்எஸ்பி) ஷானி அபேசேகரை விடுவிக்க கம்பஹா மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஷானி மற்றும் உப பொலிஸ் பரிசோதகர் சுகத் மெண்டிஸை விடுவிக்குமாறு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.
இருவரும் நேற்று மேல்முறையீட்டு நீதிமன்றத்தால் நிபந்தனை அடிப்படையில் பிணையில் விடுவிக்கப்பட்டனர். இருப்பினும், மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் பிணை நிபந்தனைகள் கம்பஹா நீதிவான் நீதிமன்றத்தில் எழுத்துப்பூர்வமாக ஒப்படைக்கப்படாததால், அவர் மீண்டும் ஜூன் 30 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
தேவையான ஆவணங்கள் ஒப்படைக்கப்பட்டதும், ஷானி அபேசேகரவை விடுவிக்க கம்பஹா மேல்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஷானி அபேசேகர கடந்த ஆண்டு ஜூலை மாதம் கைது செய்யப்பட்டார். முன்னாள் டி.ஐ.ஜி வாஸ் குணவர்தன தொடர்பான விசாரணையில் ஆதாரங்களை இட்டுக் கட்டிய குற்றச்சாட்டில், தாக்குதல் ஆயுதங்கள் சட்டம் மற்றும் வெடிபொருள் சாதனங்கள் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டார்.
இதற்கிடையில், முன்னாள் நீதி மஅமைச்சர் தலதா அத்துகோரள சில தினங்களின் முன்னர் வெளியிட்ட அறிக்கையில், ஷானிக்கு எதிரான சூனிய வேட்டையை முடிவுக்குக் கொண்டுவருமாறு அரசாங்கத்தை வலியுறுத்தியிருந்தார்,. இந்த நடவடிக்கைகள் ஜி.எஸ்.பி + சலுகைகள் மற்றும் பொருளாதார பாதுகாப்பை அச்சுறுத்துவதாகவும் எச்சரித்திருந்தார்.
கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியானதும், ஷானி சிஐடி பணிப்பாளர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டு தென்மாகாண டிஐஜியின் தனிப்பட்ட உதவியாளராக நியமிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.