25.5 C
Jaffna
February 2, 2025
Pagetamil
இலங்கை

வடக்கில் நேற்று 147 பேருக்கு தொற்று: யாழில் மட்டும் 122 பேர்!

வடமாகாணத்தில் நேற்று 147 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதில் யாழ்ப்பாணத்தில் மட்டும் 122 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.

பிசிஆர் சோதனையில் 96 பேரும், துரித அன்டிஜன் சோதனையில் 51 பேரும் அடையாளம் காணப்பட்டனர்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை, மற்றும் யாழ்ப்பாண பல்கலைகழக மருத்துவபீட ஆய்வுகூடத்தில் நேற்று 671 பேரின் பிசிஆர் மாதிரிகள் சோதனையிடப்பட்டன.

இதில் யாழ் மாவட்டத்தில், சங்கானை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில்  18 பேர், சாவகச்சேரி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 7 பேர்,  யாழ் மாகரசபை  சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 5 பேர், கோப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 6 பேர்,  உடுவில் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 6 பேர், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் 5 பேர், சங்கானை வைத்தியசாலையில் 4 பேர், பருத்தித்துறை வைத்தியசாலையில் ஒருவர், கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 6 பேர், சண்டிலிப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 13 பேர் என 71 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.

கிளிநொச்சி மாவட்டத்தில், கரைச்சி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 11 பேர், கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் ஒருவர் என 12 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.

வவுனியா மாவட்டத்தில், வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டார்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒட்டுசுட்டான் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 2 பேர், முல்லைத்தீவு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 2 பேர், முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் ஒருவர் என, 5 பேர் தொற்றிற்குள்ளாகினர்.

மன்னார் மாவட்டத்தில், மாவட்ட வைத்தியசாலையில் 5 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.

வவுனியா மாவட்டத்தில் மாவட்ட வைத்தியசாலையில் ஒருவர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டார்.

அத்துடன், பெரியகாடு தனிமைப்படுத்தல் நிலையத்தில் ஒருவர்
தொற்றுடன் அடையாளம் காணப்பட்டார்.

இதுதவிர, யாழ் மாகரசபை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு, யாழ் போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட துரித அன்டிஜன் சோதனையில் 51 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

கோயிலை புனரமைப்பு செய்தவர் தூண் விழுந்து மரணம்

east tamil

தொலைத்தொடர்பு கோபுரத்திலிருந்து விழுந்து ஒருவர் பலி

east tamil

புதிய வகை யானை வேலி கண்டுபிடிப்பு

east tamil

பொருளாதார நெருக்கடியை தடுக்கவே இறக்குமதி வரி – ஜனாதிபதி

east tamil

தமிழ் அரசு கட்சியை மீட்டெடுக்க வேண்டுமெனில் பதில் மும்மூர்த்திகள் பதவி விலக வேண்டும்!

Pagetamil

Leave a Comment