நள்ளிரவில் குடும்பப் பெண் வீட்டுக்குள் நுழைந்த இளைஞனால் அல்லோலகல்லோலம் ஏற்பட்டது. இறுதியில், இருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
தென்மராட்சி பகுதியில் சில தினங்களின் முன்னர், நள்ளிரவில் இந்த விபரீதம் இடம்பெற்றது.
கணவர் வெளிநாட்டில் தங்கியிருக்கும் நிலையில், 3 பிள்ளைகளுடன் வசித்து வந்த 37 வயதான பெண்ணொருவரின் வீடடுக்குள் இளைஞன் அத்துமீறி நுழைந்துள்ளார்.
அயல்வீட்டில் வசிக்கும் 27 வயதான இளைஞனே இப்படி வித்தை காண்பித்துள்ளார்.
அவரை கிராமசேவகர் கடுமையான தாக்கியுள்ளார். அவரும் கிராம சேவகர் மீது பதில் தாக்குதல் நடத்தினார்.
வீட்டுக்குள் தவறான நோக்கத்துடன் இளைஞன் நுழைந்ததை அவதானித்த பெண், அவரை பலமாக தாக்கியுள்ளார். அடித்த அடியில் அவருக்கு “பத்து“ போடும் நிலை ஏற்பட்டது.
உடனடியாக இருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சையின் பின் வீடு திரும்பினர்.