பிரான்ஸில் இன்றில் இருந்து வெளியில் செல்லும்போது முகக்கவசம் அணிவது கட்டாயம் அல்ல என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரான்ஸ் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவதற்காக இந்த மாதம் கடைசி வரை ஊரடங்கை அமல்படுத்தியிருந்தது. ஆனால் கொரோனா தடுப்பூசி அதிகமாக செலுத்தப்பட்டு வரும் நிலையிலும், கொரோனா தொற்று குறைந்து வரும் காரணத்தினாலும் 10 நாட்களுக்கு முன்னதாகவே, அதாவது ஜூன் 20-ந்திகதியில் இருந்து கொரோனா ஊரடங்கு தளர்த்தப்படும் என பிரான்ஸ் பிரதமர் ஜீன் காஸ்டெக்ஸ் தெரிவித்துள்ளார்.மேலும், நாளையில் இருந்து வெளியில் செல்பவர்கள் கட்டாயமாக முகக்கவசம் அணி வேண்டிய அவசியமில்லை எனவும் தெரிவித்துள்ளார்.‘‘நாங்கள் எதிபார்த்ததைவிட நாட்டில் சுகாதாரநிலை முன்னேற்றம் கண்டுள்ளது’’ என காஸ்டெக்ஸ் தெரிவித்துள்ளார். பிரான்ஸில் நேற்றைய தினசரி பாதிப்பு 3200 ஆக இருந்தது. பிரான்சில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்கு பிறகு குறைவான பதிவு இதுவாகும். இதனால் பிரான்ஸ் அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.