புதிய விண்வெளி நிலைய கட்டுமான பணிகள் ; முதல் முறையாக வீரர்களை அனுப்பியது சீனா!

Date:

சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு போட்டியாக, சீனா தனியாக ‘தியாங்காங்’ என்ற விண்வெளி நிலையத்தை உருவாக்கி வருகிறது. இதன் மையப்பகுதியான ‘தியான்ஹெ’ பெட்டகம் ஏப்ரல் 29ல் ஆட்களே இல்லாமல் விண்வெளிக்கு அனுப்பப்பட்டு, வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டது.

அதனைத் தொடர்ந்து விண்வெளி நிலையத்துக்கான எரிபொருள் உள்ளிட்ட பொருள்கள், விண்வெளி உடைகள், உணவுப் பொருள்களுடன் ‘தியான்சோ – 2′ என்ற சரக்கு விண்கலத்தை அனுப்பியது. அந்த விண்கலம் விண்வெளி நிலையத்துடன் இணைந்தது.

அதன் தொடர்ச்சியாக, விண்வெளி நிலைய கட்டுமான பணிகளை மேற்கொள்வதற்காக, பயிற்சி பெற்ற மூன்று விண்வெளி வீரர்கள் இன்று அனுப்பப்பட்டுள்ளனர். லாங் மார்ச் 2எப் ராக்கெட் மூலம் ஷென்சூ-12 என்ற விண்கலத்தில் 3 விண்வெளி வீரர்களும் பயணித்தனர்.

ராக்கெட் புறப்பட்ட 10 நிமிடங்களில் புவி வட்டப்பாதையை அடைந்ததும், வீரர்கள் இருந்த விண்கலம் தனியாக பிரிந்து விண்வெளி நிலையத்தை நோக்கி பயணித்தது. இதனையடுத்து விஞ்ஞானிகள் மகிழ்ச்சியடைந்தனர். இந்த திட்டம் வெற்றியடைந்ததாக அறிவித்தனர். விரைவில் அந்த விண்கலம் விண்வெளி நிலையத்துடன் இணைக்கப்படும்.

கிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்கு பிறகு சீனா விண்வெளிக்கு வீரர்களை அனுப்பி உள்ளது. இந்த வீரர்கள் மூன்று மாதங்கள் தியா

spot_imgspot_img

More like this
Related

பிள்ளையான், கூட்டாளிகளுக்கு தொடர்ந்து விளக்கமறியல்

மட்டக்களப்பில் கடந்த 2008 ம் ஆண்டு ரி 56 ரக துப்பாக்கியால்...

இலங்கையில் “Life City” திட்டம்: ரூபா 2027 பட்ஜெட் ஒதுக்கீட்டில் ‘கல்முனை – காரைதீவு நகராக்கம்’ ஆரம்பம்

இலங்கை அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் "Life City" 16 நகரங்களை நவீனமயப்படுத்தும் பெருந்திட்டத்தின்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்