25.3 C
Jaffna
January 15, 2025
Pagetamil
முக்கியச் செய்திகள்

தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு இந்திய தூதர் சொன்ன முக்கிய தகவல்!

மாகாணசபை தேர்தலை நடத்தி இருக்கின்ற அதிகாரங்களை பாதுகாப்பது தமிழர் தரப்பின் முதல்-  புத்திசாலித்தனமான நடவடிக்கை என தமிழ் தேசிய கூட்டமைப்பிடம் சுட்டிக்காட்டியுள்ளார் இலங்கைக்கான இந்திய தூதர் கோபால் பாக்ளே.

எனினும், மாகாணசபை தேர்தலை விரைந்து நடத்துவதற்கு தமிழர் தரப்பில் மெத்தனமாக அழுத்தங்களே பிரயோகிக்கப்படுகின்றன என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார் என்பதை தமிழ்பக்கம் நம்பகரமாக அறிந்தது.

தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும், இலங்கைக்கான இந்திய தூதர் கோபால் பாக்ளேவிற்குமிடையிலான சந்திப்பு இன்று (17) இடம்பெற்றது.

இதன்போது, இந்திய தூதர் இந்த விடயத்தை சுட்டிக்காட்டினார்.

இரா.சம்பந்தன், மாவை சேனாதிராசா, த.சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன், எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் சந்திப்பில் கலந்து கொண்டனர்.

சுமார் 2 மணி நேரத்திற்கும் அதிகமாக இந்த சந்திப்பு நீடித்ததாக தமிழ்பக்கம் அறிகிறது.

மாகாண வைத்தியசாலைகளை பறிப்பது போன்ற நடவடிக்கைகள் மூலம் மாகாண அதிகாரங்களை பறிக்கும் விடயத்தை சுட்டிக்காட்டிய தமிழ் தேசிய கூட்டமைப்பு, 13வது திருத்தத்திற்கு காரணமான இந்தியா, இதில் தலையிட்டு மாகாணசபை முறையை பேண வேண்டுமென கேட்டுக் கொண்டனர்.

அனைத்து நிகழ்வுகளையும் இந்தியா அவதானித்து வருவதாக தூதர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், தற்போது இருக்கும் அதிகாரங்களை பாதுகாப்பது தமிழர் தரப்பின் புத்திசாலித்தனமான அணுகுமுறையாக இருக்க வேண்டுமென்றும், அரசிற்கு அழுத்தம் கொடுத்து மாகாணசபை தேர்தலை விரைவில் நடத்துமாறும் குறிப்பிட்டார்.

மாகாணசபை தேர்தலை நடத்த வேண்டுமென கூட்டமைப்பின் சார்பிலான அழுத்த முயற்சிகள் போதாமலுள்ளதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அபிவிருத்தி, தடுப்பூசி விடயங்களும் கலந்துரையாடப்பட்டது.

பலாலி விமான நிலையம், காங்கேசன்துறை துறைமுகம் ஆகியவற்றை இயக்குவது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

பலாலி விமான நிலையத்தை உடனடியாக இயக்கினால், இந்த விமானத்தளம் மூலம் வருபவர்களை தனிமைப்படுத்தும் இடச்சிக்கல் உள்ளதாக இலங்கை தரப்பில் தெரிவிக்கப்படுவதையும் தூதர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தடுப்பூசி, அரசியல் தீர்வு விவகாரம்- அணுகுமுறைகள் குறித்தும் முக்கியமாக கலந்துரையாடப்பட்டுள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
1
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

இறக்குமதியாகும் வாகனங்களுக்கான வரி விபரம்

Pagetamil

பதவி விலகுவதாக அறிவித்தார் கனடா பிரதமர்: அமெரிக்காவின் புதிய மாநிலமாக இணைய ட்ரம்ப் அழைப்பு!

Pagetamil

முல்லைத்தீவில் கரையொதுங்கியவர்கள் உண்மையான அகதிகளா என ஆராய்கிறதாம் அனுர அரசு!

Pagetamil

முக்கிய தீர்மானங்கள் இல்லை… வழக்கம் போல கூடிக்கலைந்தது ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி!

Pagetamil

அனுர ஜன.13- 17 வரை சீன விஜயம்!

Pagetamil

Leave a Comment