இந்தியாவில் வேகமாக பரவி வரும் பி .1.617.2 அல்லது டெல்டா கோவிட் வைரஸினால் பாதிக்கப்பட்ட ஐந்து பேர் கொழும்பில் உள்ள தெமடகொட பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை மற்றும் நோயெதிர்ப்பு மற்றும் உயிரியல் மூலக்கூ நிறுவனத்தின் பணிப்பாளர் சந்திம ஜீவந்தர தெரிவித்தார். .
இலங்கையில் கோவிட் பரவுவது குறித்து நடத்தப்பட்ட மரபணு வரிசைமுறை சோதனைகளில் இது அடையாளம் காணப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
தெமடகொடவில் உள்ள அராமய பகுதியில் பதிவான 09 கோவிட் தொற்றாளர்களுக்கு பயோமெட்ரிக் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன, மேலும் அவர்களில் 5 பேர் இந்தியாவில் வேகமாக பரவி வரும் பி .1.617.2 அல்லது டெல்டா கோவிட் திரிபால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது தெரிய வந்துள்ளது.
மேலும், கொழும்பு மாநகரசபை பகுதியில் கொழும்பு 6, 8 மற்றும் 10 ஆகிய இடங்களிலும், கராபிட்டி மற்றும் மட்டக்களப்பு பகுதிகளில் நடத்தப்பட்ட உயிர் மாதிரி சோதனைகள் பிரித்தானியாவில் பரவும் அல்பா கோவிட் வகையால் பாதிக்கப்பட்டவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.