28.2 C
Jaffna
December 27, 2024
Pagetamil
இந்தியா

இந்தியாவில் புதிதாக 67,208 பேருக்கு கொரோனா தொற்று உறுதி: 2,330 பேர் பலி

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 67 ஆயிரத்து 208 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனாவின் 2வது அலை மெல்ல குறையத்தொடங்கியுள்ளது. குறிப்பாக கடந்த 8ம் திகதி முதல் இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 1 லட்சத்திற்கும் கீழ் பதிவாகி வருகிறது. அதன்படி, கடந்த 24 மணிநேரத்தில் இந்தியாவில் 67 ஆயிரத்து 208 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால், நாட்டில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 2 கோடியே 97 லட்சத்து 313 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 8 லட்சத்து 26 ஆயிரத்து 740 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பில் இருந்து கடந்த 24 மணிநேரத்தில் 1 லட்சத்து 3 ஆயிரத்து 570 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

இதனால், நாட்டில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 2 கோடியே 84 லட்சத்து 91 ஆயிரத்து 670 ஆக அதிகரித்துள்ளது. ஆனாலும், கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா தாக்குதலுக்கு 2 ஆயிரத்து 330 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதனால், இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3 லட்சத்து 81 ஆயிரத்து 903 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் இதுவரை செலுத்தப்பட்ட கொரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை 26 கோடியே 55 லட்சத்து 19 ஆயிரத்து 251 ஆக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் இதுவரை 38 கோடியே 52 லட்சத்து 38 ஆயிரத்து 220 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக கடந்த நேற்று ஒரேநாளில் 19 லட்சத்து 31 ஆயிரத்து 249 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

இந்திய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவு

Pagetamil

நெரிசலில் உயிரிழந்த பெண் குடும்பத்தினருக்கு ‘புஷ்பா’ படக்குழு சார்பில் ரூ.2 கோடி நிதியுதவி

Pagetamil

“என்னை நானே சாட்டையால் அடித்துக் கொள்வேன், செருப்பு அணிய மாட்டேன்!” – அண்ணாமலை கொந்தளிப்பு

Pagetamil

தமிழக மீனவர்கள் கைது, தாக்குதல் சம்பவம்: மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

Pagetamil

3 கணவர்களிடமும் இயற்கைக்கு மாறான உறவு குற்றச்சாட்டு: பெண் கைது!

Pagetamil

Leave a Comment