பாரவூர்தியின் பற்றரிக்கு அசிட் மாற்றுவதற்காக கராஜிற்கு சென்ற சாரதி, அங்கு நடந்த மதுவிருந்தில், மதுபானமென நினைத்து அசிட்டை குடித்ததால் உயிரிழந்துள்ளார்.
காலி, படதுவ பகுதியை சேர்ந்த 53 வயதான, இரண்டு பிள்ளைகளின தந்தையே உயிரிழநதுள்ளார்.
பாரவூர்தி உரிமையாளரும் இன்றும் இருவரும், பற்றரியின் அசிட் மாற்றுவதற்காக கராஜ் ஒன்றிற்கு சென்றுள்ளனர். ஒரு போத்தல் சட்டவிரோத மதுபானம், இரண்டு போத்தல்கள் அசிட் ஆகியவற்றை சோடா போத்தல்களில் கொண்டு சென்றுள்ளனர்.
பற்றரியில் மின்னேற்றுவதற்காக இணைத்து விட்டு, கராஜ் உரிமையாளருடன், மூவரும் மது அருந்தியுள்ளனர்.
அப்போது, பாரவூர்தி உரிமையாளர் மதுபானம் என நினைத்து அசிட்டை அருந்தியுள்ளார்.
அவர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதும் உயிரிழந்துள்ளார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1