தற்போது நாடு முழுவதும் கொரோனா பரவல் இரண்டாவது அலை காரணமாக அந்தந்த மாநில அரசுகள் மக்கள் ஒரு இடம்விட்டு ஒரு இடம் செல்வதற்காக பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். அதன்படி கேரளாவில் மக்கள் ஊரை விட்டு வெளியே செல்ல வேண்டுமென்றால் மக்கள் இபாஸ் எடுக்கவேண்டும் என கட்டாயபடுத்தியுள்ளனர்.
இந்நிலையில் கொல்லம் மாவட்டம் பாரப்பள்ளி பகுதியை சேர்ந்த ஒருவர் ஆட்டோ ஓட்டி வருகிறார். அவரது குறைந்த வருமானம் காரணமாக சிறிய வீட்டில் வசித்து வருகிறார். அங்கு அவருக்கு கழிவறை வசதியில்லை. இதனால் அவர் தினமும் தன் ஆட்டோவிற்கு பெட்ரோல் போடும் பெடரோல் பங்கிற்கு சென்று அங்கிருக்கும் கழிவறையை பயன்படுத்தி வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர் அவசரமாக கழிவறைக்கு செல்ல தனது வீட்டிலிருந்து தன் ஆட்டோவை எடுத்துக்கொண்டு பெட்ரோல் பங்கிற்கு சென்றுள்ளார். செல்லும் வழியில் வாகனசோதனையில் ஈடுபட்டு வந்தபோலீசார் அவரை மடக்கி பிடித்து இபாஸ் கேட்டுள்ளனர். அதற்கு அவர் தான் பெட்ரோல் பங்கிற்கு செல்வதாகவும், கூறியுள்ளார். ஆனாலும் போலீசார் அவர் கூறியதைகேட்காமல் அவரது ரூ2 ஆயிரம் அபராதம் விதித்துள்ளனர். ஆனால் அபராதம் கட்ட அவரிடம் பணம் இல்லாததால் போலீசார் அவரது ஆட்டோவை பறிமுதல் செய்துள்ளனர்.
இதையடுத்து அந்த ஆட்டோ டிரைவர் கஷ்டப்பட்டு பல இடங்களில் கடன் வாங்கி அந்த அபராதத்தை கட்டி ஆட்டோவை மீட்டுள்ளார். இந்த சம்பவம் கடந்த ஜூன் 2ம் திகதியே நடந்திருந்தாலும் தற்போது தான் வெளிச்சத்திற்க வந்துள்ளது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய ஆட்டோ டிரைவர் மற்றும் போலீசாரின் பெயர்கள் அவர்களின் பாதுகாப்பு கருதி வெளியிடப்படவில்லை.