ஒட்டுமொத்தமாக ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்ட கொரோனா நோயாளிகளில் 0.5 சதவீதம் பேர் ஆரம்ப நோய் அறிதலுக்கு பிறகு 30 நாட்கள் அல்லது அதற்கு மேற்பட்ட நாட்களில் உயிரிழந்தவர்கள் என்று தெரிவித்துள்ளது.கொரோனா வைரசால் பாதிக்கப்படுபவர்களுக்கு இருமல், தலைவலி, காய்ச்சல், உடல் வலி உள்ளிட்ட பல்வேறு அறிகுறிகள் ஏற்படும்.
அதேவேளையில் அறிகுறிகள் இல்லாமலும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படுவது தெரியவந்தது. அப்படி பாதிக்கப்படுபவர்களுக்கு பரிசோதனையில் தான் தொற்று உறுதி செய்யப்படுகிறது.
இந்த நிலையில் அறிகுறியாக கொரோனா நோயாளிகளில் 5-ல் ஒருவருக்கு தொற்றில் இருந்து குணம் அடைந்த பிறகு நீண்ட நாட்கள் பாதிப்பு இருக்கிறது என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவை சேர்ந்த ‘பெர்’ சுகாதார பகுப்பாய்வு நிறுவனத்தில் கடந்த ஆண்டு பிப்ரவரி முதல் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் வரை 19.6 லட்சம் அமெரிக்கர்கள் உடல்நல பாதிப்பு காரணமாக இன்சூரன்சுக்கு விண்ணப்பித்துள்ளனர்.
இதில் அதிகமாக கொரோனாவில் இருந்து குணம் அடைந்தவர்கள் நீண்ட நாட்களாக பாதிப்புடன் இருப்பது தெரிந்தது. அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளதாவது:-அறிகுறியற்ற கொரோனா நோயாளிகளில் கிட்டத்தட்ட 5-ல் ஒருவர் தொற்றில் இருந்து குணம் அடைந்த பிறகு நீண்ட கொரோனா அறிகுறி பாதிப்புகளை அனுபவித்துள்ளனர்.
அறிகுறி உள்ள நோயாளிகளில் ஆஸ்பத்திரிகளில் சேர்க்கப்படாத 27.5சதவீதம் பேர் நீண்ட நாட்களாக பாதிப்புடன் உள்ளனர். ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டவர்களில் 50 சதவீதம் பேர் நீண்ட கால கொரோனா அறிகுறி பாதிப்புடன் உள்ளனர்.மிக நீண்ட கொரோனா பாதிப்பு ஆண்களைவிட பெண்களுக்கு அதிகம் ஏற்பட்டுள்ளது. இதய அழற்சி போன்றவை ஆண்களிடம் அதிகம் காணப்பட்டன.
கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்ட 30 நாட்களுக்கு பிறகு மதிப்பீடு செய்யப்பட்ட நான்கு மனநல பிரச்சினைகளால் ஏற்படும் கவலை மிகவும் பொதுவானது. அதைத் தொடர்ந்து மனச்சோர்வு, நடுக்க கோளாறு உள்ளிட்டவை ஏற்படுகிறது.
ஒட்டுமொத்தமாக ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்ட கொரோனா நோயாளிகளில் 0.5 சதவீதம் பேர் ஆரம்ப நோய் அறிதலுக்கு பிறகு 30 நாட்கள் அல்லது அதற்கு மேற்பட்ட நாட்களில் உயிரிழந்தவர்கள் என்று தெரிவித்துள்ளது.