அத்தியவசிய பொருட்கள் விநியோகத்திற்கு வழங்கப்பட்டுள்ள அனுமதி பத்திரங்களின் செல்லுபடி காலம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
14 ஆம் திகதியுடன் நிறைவடைய இருந்து குறித்த அனுமதிப் பத்திரங்களின் செல்லுபடி காலம் எதிர்வரும் 21 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
பயணக் கட்டுப்பாடு பிறப்பிக்கப்பட்டுள்ள காலப் பகுதியில் மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை விநியோகம் செய்வதற்காக வழங்கப்பட்டுள்ள குறித்த அனுமதிப் பத்திரத்தை தேவையற்ற முறையில் பயன்படுத்த வேண்டாம் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1