24.7 C
Jaffna
January 19, 2025
Pagetamil
இந்தியா உலகம்

இந்திய பயணிகளுக்கான தடையை நீட்டித்த பிலிப்பைன்ஸ்!

நாட்டில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்ததைத் தொடர்ந்து இந்திய விமானங்களுக்கு பல்வேறு நாடுகள் தற்காலிகத் தடைவிதித்தன. தொற்று பரவலைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்தியப் பயணிகளுக்கு தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் நாட்டில் நிலவி வரும் கொரோனா தொற்று சூழல் காரணமாக இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசம், நேபாளம், ஓமன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை ஜூன் 30-ம் திகதி வரை நீட்டிக்கப்படுவதாக பிலிப்பைன்ஸ் அரசு தெரிவித்துள்ளது.

மேலும் இந்த நாடுகளுக்கு கடந்த 14 நாள்களுக்குள்ளாக பயணம் மேற்கொண்ட இதர நாட்டு பயணிகளும் பிலிப்பைன்ஸ் நாட்டிற்குள் நுழைய தடை தொடரும் எனவும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

கவிழ்ந்த கொள்கலனில் பெற்றோல் எடுத்த 70 பேர் எரிந்து பலி

Pagetamil

காஸா எல்லையில் இன்று போர் நிறுத்தம்

east tamil

படகு கவிழ்ந்து 40 பாகிஸ்தானியர்கள் பலி

east tamil

அமெரிக்காவில் டிக்டொக் செயலிக்குத் தடை

east tamil

காதலனை விசம் வைத்து கொன்ற யுவதிக்கு தண்டனை ஒத்திவைப்பு: பெண்ணல்ல பிசாசு என சாடல்!

Pagetamil

Leave a Comment