நாட்டில் நேற்று (14) பதிவான COVID-19 தொற்றாளர்களில் கம்பஹா மாவட்டத்தில் இருந்தே அதிக எண்ணிக்கையானவர்கள் பதிவாகியுள்ளனர்.
நேற்று நாடு முழுவதும் 2,284 தொற்றாளர்கள் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து நாட்டில் உறுதி செய்யப்பட்ட COVID-19 தொற்றாளர்களின் எண்ணிக்கை நேற்று 225,922 ஆக உயர்ந்தது.
நேற்று, கம்பஹா மாவட்டத்தில் இருந்து 526 பேர், கொழும்பு மாவட்டத்தில் இருந்து 287 பேர், இரத்தினபுரி மாவட்டத்தில் இருந்து 260 பேர், களுத்துறை மாவட்டத்தில் இருந்து 155 பேர், காலி மாவட்டத்தில் இருந்து 134 பேர், நுவரெலியா மாவட்டத்தில் இருந்து 123 பேர், பதுளை மாவட்டத்தில் இருந்து 98 பேர், கண்டி மாவட்டத்தில் இருந்து 93 பேர், புத்தளம் மாவட்டத்தில் இருந்து 91 பேர், கேகாலை மாவட்டத்தில் இருந்து 77 பேர், யாழ் மாவட்டத்தில் இருந்து 61பேர், குருநாகல் மாவட்டத்தில் இருந்து 59 பேர், மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து 47 பேர், மாத்தளை மாவட்டத்தில் இருந்து 40 பேர், ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் இருந்து 35 பேர், திருகோணமலை மாவட்டத்தில் இருந்து 31 பேர், கிளிநொச்சி மாவட்டத்தில் இருந்து 30 பேர், அம்பாறை மற்றும் மொனராகலை மாவட்டத்தில் இருந்து தலா 29 பேர், பொலன்னறுவை மாவட்டத்தில் இருந்து 15 பேர், வவுனியா மாவட்டத்தில் இருந்து 13 பேர், மாத்தறை மாவட்டத்தில் இருந்து 12 பேர், அனுராதபுரம் மாவட்டத்தில் இருந்து 8 பேர், மன்னார் மாவட்டத்தில் இருந்து 5 பேர், முல்லைத்தீவு மாவட்டத்தில் இருந்து ஒருவர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.
வெளிநாட்டிலிருந்து வந்த 25 பேரும் நேற்று தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.