முதல்வர் ஸ்டாலினுடன் விஜய் சேதுபதி சந்திப்பு: கொரோனா நிவாரண நிதி வழங்கினார்!

Date:

தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து விஜய் சேதுபதி கொரோனா நிவாரண நிதி வழங்கினார்

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை அச்சுறுத்தலால் கடும் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது கரோனா அச்சுறுத்தல் குறையத் தொடங்கியுள்ளதால், சில தளர்வுகளுடன் ஊரடங்கினை தமிழக அரசு நீட்டித்துள்ளது. ஆனால், கரோனா அச்சுறுத்தல் அதிகம் உள்ள மாவட்டங்களில் முழுமையான ஊரடங்கு தொடர்கிறது.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. மேலும், தமிழக அரசும் பொதுமக்களுக்கு பல்வேறு வழிகளில் உதவிகள் செய்து வருகிறது. இதற்காக முதல்வர் நிவாரண நிதிக்கு நிதியுதவி வழங்கலாம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இதற்காக கோடீஸ்வரர்கள், பெரும் நிறுவனங்கள், அரசியல், சினிமா, வெளிநாடுவாழ் தமிழர்கள் உள்ளிட்ட பலரும் முதல்வர் நிவாரண நிதிக்கு நிதியுதவி செய்து வருகிறார்கள். தற்போது விஜய் சேதுபதியும் முதல்வர் நிவாரண நிதிக்கு 25 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளார்.

இதற்கான காசோலையை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து விஜய் சேதுபதி வழங்கினார்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

விமானம் ரத்தானதால் ஆன்லைன் மூலம் ‘ரிசப்ஷனில்’ பங்கேற்ற புதுமண ஜோடி

இண்​டிகோ விமானம் திடீரென ரத்து செய்​யப்​பட்​ட​தால் புதுமண ஜோடி திருமண வரவேற்​பில்...

2026 வரவு செலவு திட்டம் நிறைவேற்றம்!

2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு, திருத்தங்களுடன்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்