இந்தியாவில் கடந்த 24மணிநேரத்தில் 60,471 பேர் பாதிப்பு, 1,17,525 பேர் தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். கொரோனா 2வது அலையின் தீவிரம் படிப்படியாக குறைந்து வருகிறது. கடந்த 75 நாட்களுக்கு பிறகு, நேற்றைய பாதிப்பு 60ஆயிரமாக குறைந்துள்ளது.
மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் புதியதாக 60,471 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனால் மொத்த பாதிப்பு 2,95,70,881 ஆக உயர்ந்துள்ளது.
நேற்று ஒரே நாளில் 1,17,525 பேர் தொற்று பாதிப்பில் இருந்து விடுபட்டுள்ளதால், இதுவரை குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 2,82,80,472 ஆக அதிகரித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் தொற்று பாதிப்பு காரணமாக சிகிச்சை பலனின்றி 2726 பேர் மரணத்தை தழுவி உள்ளனர். இதுவரை உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 3,77,031 ஆக உயர்நதுள்ளது.
தற்போதைய நிலையில், கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக சிகிச்சை பெறுவோர் மொத்த எண்ணிக்கை 9,13,378
நாடு முழுவதும் இதுவரை 25,90,44,072 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு உள்ளது.