காலி மாவட்டத்தில் அண்மையில் பெய்த அடை மழையினால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கின் போது, தனது 08 மாத கர்ப்பிணி மனைவியை 11 கிலோமீற்றர் தூரம் தூக்கிச் சென்ற கணவன் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
வெள்ளத்திற்குள்ளால் தனது கர்ப்பிணி மனைவியை தூக்கிச் செல்லும் கணவனின் படங்கள் அண்மையில் சமூக ஊடகங்களில் வைரலாகியிருந்தது.
ஹினிதும, பொடிக்கந்து எஸ்டேட்டை சேர்ந்த இளம் ஜோடி, தமது முதலாவது பிரசவத்தை எதிர்பார்த்துள்ளனர்.
அண்மையில் பெய்த அடை மழையினால் பெரும் வெள்ளம் ஏற்பட்டது. உதுகம வைத்தியசாலைக்கு செல்ல 20 கிலோ மீற்றர் பயணிக்க வேண்டியிருந்தது. வெள்ளப்பெருக்கு இருந்த 11 கிலோமீற்றர் தூரத்தையும் மனைவியை தூக்கிக் கொண்டே சென்றுள்ளார்.
What’s your Reaction?
+1
+1
+1
1
+1
+1
+1
+1