‘பாகுபலி’ படங்களுக்குப் பிறகு இந்திய அளவில் பிரபலமான நடிகராகிவிட்டார் பிரபாஸ். இதனால் அவர் நடித்து வரும் படங்களை பான்-இந்தியா படமாகவே உருவாக்கி வருகின்றனர். இதன் காரணமாக இந்திய அளவில் பிரபலமான நடிகைகளை அவருக்கு ஜோடியாக நடிக்க வைக்கின்றனர். குறிப்பாக பாலிவுட் நடிகைகளுக்கு முன்னுரிமை கொடுக்கப்படுகிறது. அந்த வகையில், சாஹோ படத்தில் ஷ்ரத்தா கபூருடன் ஜோடி சேர்ந்த பிரபாஸ், ஆதிபுருஷ் படத்தில் கீர்த்தி சனோனுடன் நடித்து வருகிறார்.
இது தவிர மகாநடி இயக்குனருடன் பிரபாஸ் இணையும் படத்தில் முன்னணி பாலிவுட் நடிகையான தீபிகா படுகோனே நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். அவர் நடிக்கும் முதல் தெலுங்கு படம் இதுவாகும். பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகும் இப்படத்தில், பிரபாஸுக்கு ஜோடியாக நடிக்க, நடிகை தீபிகா படுகோனேவுக்கு ரூ.8 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாம். இதையறிந்த தென்னிந்திய நடிகைகள் வாயடைத்துப்போய் உள்ளார்களாம்.