குடும்பத் தகராறில் கணவரை கொன்று அவரது ஆணுறுப்பை வெட்டி சமைத்த மனைவியை பிரேசில் பொலிசார் கைது செய்துள்ளனர்.
சாவோ கோன்கலோ நகரில் கடந்த திங்கள்கிழமை அவர் கைது செய்யப்பட்டார்.
தயான் கிறிஸ்டினா ரோட்ரிக்ஸ் மச்சாடோ (33) என்பவரே கைதானார்.
கடந்த 2ஆம் திகதி தம்பதியினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதை தொடர்ந்து, இந்த கொலை நடந்தது.
அன்று அதிகாலை 4 மணிக்கு அண்மித்த நேரத்தில் குற்றம் நடந்துள்ளது.
சம்பவம் நடந்த நாளில் கணவர் ஆண்ட்ரோவின் அலறல் சத்தம் கேட்டது.
தம்பதியினர் இருவரும் வழக்கமாக சண்டையிடுவது போன்று சண்டையிடுவார்கள் என்ற நினைப்பில் அயலவர்கள் கண்டு கொள்ளாமல் விட்டு விட்டார்கள். இருந்தும், கணவரின் சத்தம் தொடர்ந்து கேட்கவில்லை என்பதால் பக்கத்து வீட்டுக்காரருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவர் பொலிசாருக்கு தகவல் அளித்தார்.
பொலிசார் வீட்டுக்குள் நுழைந்த போது, ஆண்ட்ரோவின் உடல் நிர்வாணமாக காணப்பட்டது. உடலின் பாகங்கள் வெட்டப்பட்டு, இரத்த வெள்ளமாக காணப்பட்டுள்ளது.
வீட்டு சமையலறைக்குள் எவ்விதமான சலனமுமின்றி மனைவி சமையல் செய்து கொண்டிருந்தார். பொலிசார் ஆய்வு செய்தபோது, சமையல் பாத்திரத்தில் கணவரின் ஆணுறுப்பை சோயா எண்ணெய் ஊற்றி வறுத்துக் கொண்டிருந்தது தெரிய வந்தது.
அதிகாலை 4 மணியளவில் ஆண்ட்ரோ தூங்கிக்கொண்டிருந்த போது, கிறிஸ்டினா கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளார். பின்னர் அவரது உடலிலுள்ள பாகங்களை தனித்தனியாக வெட்டி எடுத்துள்ளார். ஆணுறுப்பு போன்ற முக்கிய உறுப்புகளை எடுத்து சமைத்து சாப்பிட முடிவு செய்துள்ளார். அதன்படி சில உறுப்புகளை வெட்டி எடுத்து சட்டியில் எண்ணெய் ஊற்றி வறுத்துள்ளார்.
கொலை செய்ததற்கான காரணம் குறித்து அவரிடம் விசாரித்தபோது தன்னை கொல்ல முயன்றதாகவும் தற்காப்புக்காக எதிர்த் தாக்குதல் நடத்தியதாகவும், இந்த மோதலில் கணவர் இறந்து விட்டதாகவும் கூறியுள்ளார்.
அந்த தம்பதி 10 வருடங்களின் முன் திருமணம் செய்துள்ளது. அவர்களிற்கு 10, 5 வயதில் பிள்ளைகள் உள்ளனர்.
இருவரும் பிரிந்து வாழலாமென கிறிஸ்டினா தீர்மானித்த போது, ஆண்ட்ரோ அதற்கு சம்மதிக்கவில்லை. “தன்னுடன் இருக்க முடியாவிட்டால், அவர் யாருடனும் இருக்க முடியாதென“ கணவர் மிரட்டியதாக, மனைவியின் சட்டத்தரணி கூறியுள்ளார்.
கிறிஸ்டினா மீது கொலை மற்றும் சடலத்தை இழிவுபடுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளதுடன், சம்பவ இடத்திலிருந்து ஒரு சமையலறை கத்தியை பொலிசார் பறிமுதல் செய்தனர்.