50 உரப் பைகளைத் திருடிய குற்றச்சாட்டில் வாரியபொல பகுதியில் உள்ள விவசாயத் திணைக்களத்தில் இணைக்கப்பட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
விவசாயிகளுக்கு வழங்கப்பட வேண்டிய உரப் பைகளை அந்த அதிகாரி சட்டவிரோதமாக எடுத்துச் சென்றுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. ஒவ்வொன்றும் 1500.ரூபா பெறுமதியுடைய பொதிகள் அவை.
வாரியபொல பகுதியில் உள்ள தனது தனியார் கடையில் உரப் பைகளை சட்டவிரோதமாக சேமித்து வைத்த சந்தேக நபரை பொலிசார் நேற்று கைது செய்தனர்.
சந்தேகநபர் இன்று வாரியபொல நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1