உடலுக்கு தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களில் வைட்டமின் டி யும் ஒரு ஊட்டச்சத்தாக உள்ளது. வைட்டமின் டியை நாம் பல வழிகளில் பெறுகிறோம். முக்கியமாக சூரிய ஒளியின் வழியாக நம்மால் விட்டமின் டி யை பெற முடியும். ஆனால் சிலர் வைட்டமின் டி பெண்களுக்கு தீங்கு விளைவிப்பதாக கூறுகின்றனர். முக்கியமாக இது பெண்களுக்கு மார்பக புற்றுநோயை ஏற்படுத்துகிறது என சிலர் கூறுகின்றனர்.
இந்நிலையில் பெண்கள் சிலர் தங்கள் உணவுகளில் வைட்டமின் டியை பயன்படுத்துவதை குறைக்கின்றனர். இது எந்த அளவு உண்மை என்பதை அறியாமலே நாம் இப்படிப்பட்ட முடிவுகளை எடுக்க கூடாது. எனவே உண்மையிலேயே விட்டமின் டி மார்பக புற்றுநோய்க்கு காரணமாக இருக்கிறதா என பார்ப்போம்.
ஆராய்ச்சியின்ப்படி மார்பக புற்றுநோய் நோயாளிகள் சிகிச்சை பெறும்போதும் அதற்கு பிறகும் தொடர்ந்து வைட்டமின் டி யை பெறுகின்றனர். அது அவர்களுக்கு நன்மையையே ஏற்படுத்துகிறது.
இந்த ஆய்வில் ஆப்பிரிக்க பெண்கள் குறைந்த அளவில் விட்டமின் டியை கொண்டிருப்பது கண்டறியப்பட்டது. அவர்களுக்கு ஏற்கனவே மார்பக புற்றுநோய் இருந்தது. ஆனால் அவர்களின் ஏழ்மை காரணமாக அவர்களுக்கு சரியான ஊட்டச்சத்து கிடைக்கவில்லை என கூறப்படுகிறது
இந்த கண்டுப்பிடிப்புகள் பெண்களுக்கு மார்பக புற்றுநோயை எதிர்த்து போராடுவதற்கான எளிய புதிய வழிகளை வழங்குகின்றன என்று ஒரு நிபுணர் கூறுகிறார்.
எப்படி இருந்தாலும் ஊட்டச்சத்து குறைப்பாடுள்ள பெண்களுடன் ஒப்பிடும்போது போதுமான அளவு விட்டமின் டி கொண்ட பெண்கள் இறப்பதில் இருந்து 27 சதவீத முரண்பாட்டை கொண்டுள்ளனர் மற்றும் இவர்கள் மார்பக புற்றுநோயால் இறப்பதற்கான வாய்ப்புகள் 22 சதவீதம் குறைவாகவே உள்ளன. எனவே விட்டமின் டி மார்பக புற்றுநோய்க்கு காரணம் அல்ல என்பதை நாம் இதன் மூலம் அறிய முடியும்.