26.3 C
Jaffna
January 10, 2025
Pagetamil
குற்றம்

பருத்தித்துறை வைத்தியசாலை காவலாளி காம வேட்டை: பாட்டியை பராமரிக்க நின்ற 15 வயது சிறுமியுடன் பற்றைக்குள் உல்லாசம்!

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் நோயாளியுடன் தங்கியிருந்த 15 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில், வைத்தியசாலையில் கடமைபுரிந்த தனியார் பாதுகாப்பு நிறுவன காவலாளி கைது செய்யப்பட்டுள்ளார்.

உயிர்காக்கும் உன்னதமான இடத்தில், காவாலியாக மாறிய காவலாளி, பார்த்த மாத்திரத்திலேயே காதலாகி, சிறுமியை கர்ப்பமாக்க முயன்றது பற்றிய பல்வேறு அதிர்ச்சி தகவல்களை கொண்ட செய்தித் தொகுப்பு இது.

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அல்வாய் பகுதியை சேர்ந்த மூதாட்டியொருவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை பார்க்க 15 வயதான பேத்தியார் வைத்தியசாலையில் தங்கியிருந்தார்.

கடந்த 10ஆம் திகதி வைத்தியசாலை பாதுகாப்பு கடமையில் இருந்த தனியார் நிறுவன காவலாளிக்கும், சிறுமிக்கும் பார்வையிலேயே காதல் பற்றிக் கொண்டுள்ளது. கண்களால் கதை பேசியது போதாதென, தனது கையடக்க தொலைபேசி இலக்கத்தையும் எழுதி, சிறுமியுடன் கொடுத்துள்ளார் அந்த மன்மதராசா.

சிறுமியும் அந்த இலக்கத்திற்கு அழைக்க, இருவரும் தொலைபேசியில் சில தடவைகள் பேசியுள்ளனர்.

ஒரேநாளில் சிறுமியை வளைத்துப் போட்ட மன்மதராசா, அன்று இரவு 10 மணியளவில் சிறுமியை தொலைபேசியில் அழைத்து வைத்தியசாலைக்கு வெளியில் வருமாறு கூப்பிட்டுள்ளார்.

வைத்தியசாலைக்கு முன்பாக உள்ள சைக்கிள் நிறுத்துமிட ஓடைக்குள் சிறுமியை அழைத்துச் சென்ற காவலாளி, இரவு 10 மணிவரை அங்குள்ள பற்றைக்குள் குடும்பம் நடத்தியுள்ளார்.

இரவு 1 மணிக்கு பின்னர் காவலாளி சிறுமியை விடுவித்துள்ளார்.

மீண்டும் வைத்தியசாலைக்குள் சிறுமி நுழைந்த போது, வெளிநோயாளர் பிரிவில் இருந்தவர்கள் சந்தேகமடைந்து சிறுமியை அழைத்து விசாரித்துள்ளனர். தூக்கம் வந்ததால், வைத்தியசாலைக்கு வெளியில் தூங்கி விட்டு வருவதாக சிறுமி அசால்ட்டாக நிலைமையை சமாளித்து விட்டார்.

எனினும், வெளிநோயாளர் பிரிவிலிருந்து உத்தியோகத்தர்களிற்கு சந்தேகம் தீரவில்லை. அவர்கள் பொறுப்பான முறையில் இதை கையாண்டனர்.

மறுநாள் வைத்தியசாலைக்கு சிறுமியின் மூத்த சகோதரன் வந்தபோது, அவரிடம் விடயத்தை கூறி, சிறுமியின் நடத்தையில் தமக்குள்ள சந்தேகத்தை தெரிவித்தனர்.

சிறுமியை வீட்டுக்கு அழைத்து சென்ற சகோதரன், வைத்தியசாலையில் நடந்த விடயங்கள் பற்றி விசாரணை நடத்தியுள்ளார். சிறுமி நடந்த அனைத்தையும் அண்ணனிடம் சொல்லியுள்ளார்.

அண்ணன், பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தார்.

உடனடியாக விசாரணையை தொடங்கிய பருத்தித்துறை பொலிசார், பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் காவலாளியை கைது செய்தனர். அவர் வல்வெட்டித்துறை பகுதியை சேர்ந்த 22 வயதானவர்.

சிறுமியிடம் நடத்திய விசாரணையில், இரவு 10 மணி முதல் அதிகாலை 1 மணி வரை காவலாளி சில தடவைகள் பாலியல் வன்புணர்வு செய்ததை வெளிப்படுத்தினார்.

காவலாளி பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சிறுமி பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சிறுமியின் வாக்குமூலத்தின் அடிப்படையில் வேறு இரண்டு சம்பவங்கள் குறித்தும் பொலிசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

What’s your Reaction?
+1
1
+1
1
+1
1
+1
3
+1
1
+1
3
+1
3

இதையும் படியுங்கள்

வீடு உடைத்து பெண்ணை வல்லுறவுக்குள்ளாக்கி கொள்ளையடித்தவருக்கு நீதிமன்றம் வழங்கிய தண்டனை!

Pagetamil

கசிப்பு குடிக்க ரூ.300 தராத மனைவியை அடித்துக் கொன்ற முரட்டுக் கணவன்

Pagetamil

பெண்ணுடன் எக்குத்தப்பாக நடந்த பொலிஸ்காரர் கைது!

Pagetamil

யாழ்ப்பாணத்தில் மலைவிழுங்கி மனேஜர் கைது!

Pagetamil

சிறுவர் இல்லத்தில் சீரழிக்கப்பட்ட 9 வயது சிறுமி!

Pagetamil

Leave a Comment