அஜித் ரசிகர்கள் ட்விட்டரில் ஷிவாங்கி பற்றி கடுமையக ட்ரோல் செய்து வருகின்றனர். அவருக்கு விஜய் ரசிகர்கள் ஆதரவு தெரிவித்து உள்ளனர்.
குக் வித் கோமாளி மூலமாக பாப்புலர் ஆனவர் ஷிவாங்கி. நடந்து முடிந்திருக்கும் இரண்டு சீசன்களிலும் ரசிகர்களை வெகுவாக சிரிக்க வைத்தது அவரது காமெடி.
குக் வித் கோமாளி மூலமாக அவர் புகழ் பெற்றிருக்கும் நிலையில் தற்போது சினிமாவிலும் அவருக்கு வாய்ப்புகள் வந்துகொண்டிருக்கிறது. சிவகார்த்திகேயனின் டான் படத்தில் அவர் நடித்து வருகிறார்.
ஷிவாங்கி மற்றும் அஸ்வின் இருவரும் சமீபத்தில் ஒரு youtube சேனலுக்கு பேட்டி கொடுத்து இருந்தனர். அந்த பேட்டியை எடுத்தது குக் வித் கோமாளி சக்தி தான். அந்த பேட்டி தான் தற்போது ஷிவாங்கிக்கு பிரச்னையை கொண்டு வந்திருக்கிறது.
விஜய்யின் கடைசி படம் என்ன என கேட்டபோது ‘மாஸ்டர்’ என உடனே பதில் சொன்னார் ஷிவாங்கி. ஆனால் அஜித்தின் நடிப்பில் கடைசியாக வந்த படம் என்ன என கேட்டதற்கு ஷிவாங்கி பதில் தெரியாமல் விழித்தார். அஜித்தின் மற்ற பழைய படங்களின் பெயர்களை கூறிக்கொண்டிருந்த ஷிவாங்கியிடம் அஜித்தின் அடுத்த படத்தின் பெயரையாவது சொல் என கேட்டால்.. அதுவும் அவருக்கு தெரியவில்லை.
இந்த வீடியோ வைரலான நிலையில் அஜித் ரசிகர்கள் ட்விட்டரில் ஷிவாங்கியை திட்டி வந்தனர். அவரை பற்றி மோசமான கமெண்டுகள் அதிகம் வந்திருந்தது. இந்நிலையில் தற்போது விஜய் ரசிகர்கள் ஷிவாங்கிக்கு ஆதரவாக பேசி வருகின்றனர்.
ஷிவாங்கி இந்த பிரச்சனை பற்றி ட்விட்டரில் பதிவிட்டு உள்ளார். ‘Inhale Positivity, Exhale Negativity’ என கூறி உள்ளார்.
இருப்பினும் ஷிவாங்கியை பற்றிய ட்ரோல் இன்னும் நிற்கவில்லை. அஜித் பற்றி தவறாக எதுவுமே பேசாத நிலையில் ஷிவாங்கி இப்படி சர்ச்சையில் சிக்கிக்கொண்டிருக்கிறார் என நெட்டிசன்கள் ட்விட்டரில் கூறி வருகின்றனர்.