Pagetamil
இலங்கை

யாழில் இரகசிய திருமணம்; பொலிசாரை கண்டு தப்பியோடிய விருந்தினர்கள்: 50 பேரை காட்டிக் கொடுத்தது திருமண வீடியோ!

வடமராட்சி பகுதியில் கொவிட் 19 கட்டுப்பாடுகளை மீறி அனுமதியின்றி நடாத்தப்பட்ட திருமண நிகழ்வில் கலந்து கொண்ட குருக்கள், புகைப்படப் பிடிப்பாளர்கள் உட்பட சுமார் 50 ற்கும் மேற்பட்டோர் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் இன்று மண்டான், கரணவாய் மேற்கு பகுதியில் இடம்பெற்றுள்ளது.

கட்டுவனை சேர்ந்த இளைஞனிற்கும், மண்டானை சேர்ந்த யுவதிக்கும் இன்று சுகாதார தரப்பின் அனுமதியின்றி திருமணம் நடைபெற்றது.

இது குறித்த தகவல் நெல்லியடி பொலிஸாருக்கு கிடைத்ததையடுத்து, சம்பவ இடத்திற்கு சென்றனர்.

பொலிசார் வந்ததை அவதானித்த திருமண வீட்டு விருந்தினர்கள் நாலா திசையிலும் சிதறி தப்பியோடி விட்டனர்.

பொலிசார் அதிரடியாக நுழைந்து, வீடியோ படப்பிடிப்பாளரை பிடித்து விட்டனர். அவரது கமராவை பறிமுதல் செய்து, புகைப்படத்தில் இருந்தவர்களை அடையாளம் கண்டனர்.

இதன்படி, 50 பேர் அடையாளம் காணப்பட்டனர்.

உடனடியாக, கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரிக்கு தகவல் வழங்கப்பட்டது. பொதுச்சுகாதார பரிசோதகர்கள் சம்பவ இடத்திற்கு வந்து, குருக்கள், புகைப்பட பிடிப்பாளர் மற்றும் திருமணத்திற்கு வந்து தலைதெறிக்க தப்பியோடியவர்கள் என 50 பேரை தனிமைப்படுத்தியுள்ளனர்.

What’s your Reaction?
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1

இதையும் படியுங்கள்

இன்றைய வானிலை

Pagetamil

இயக்கத்துக்கு பயந்து உயர் நீதிமன்றம் சென்ற மஹிந்த!

Pagetamil

தமிழ் தேசிய கட்சிகளின் ஒற்றுமை சாத்தியமா?

Pagetamil

சாரதிகளுக்கான முக்கிய அறிவுறுத்தல்

east tamil

இந்திய மீனவர் அத்துமீறல்: எதிர்க்கட்சி தமிழ், முஸ்லிம் எம்.பிகளை சந்தித்த மீனவர் பிரதிநிதிகள்!

Pagetamil

Leave a Comment