முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட உடையார் கட்டு இருட்டு மடு கிராமத்தில் மா மரத்தில் மாங்காய் பறிக்க ஏறிய குடும்பஸ்தர் தவறுதலாக விழுந்து உயிரிழந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
வெள்ளையன் சண்முகநாதன் (51) என்ற குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கடந்த 10ஆம் திகதி இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது.
இவரது உயிரிழப்பு தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதுடன் இவரது சடலம் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனை கொண்டுசெல்லப்பட்டு பி.சி.ஆர் பரிசோதனையின் கொரோனா தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளதை தொடர்ந்து பிரோதபரிசோதனைகளின் பின்னர் உறவினர்களிடம் உடலம் ஒப்படைக்கப்பட்டது.
இன்று அவரது இறுதிக்கிரியைகள் நடந்தன.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1