இந்தியா இந்து மத கோவில்கள் நிறைந்த பூமி ஒவ்வொரு தெருக்களிலும் கூட கோவில் இருக்கிறது என சொன்னால் அது மிகை அல்ல. அந்த அளவிற்கு கோவில்களால் நிறைந்த பூமி. ஆனால் இந்தியாவை விட இஸ்லாமிய நாடான இந்தோனேஷியாவில் பாலி பகுதியில் உள்ள ஒரு இந்து கோவில் தனிச்சிறப்பு பெற்றது.
இந்தோனேஷியாவின் கடற்கரை பகதியில் கடலுக்கு நடுவே உள்ள பாறையில் கட்டப்பட்டுள்ள இந்த ஆலயம் தான் தன்னாலாட். கடலில் மண் அரிப்பு ஏற்பட்டதால் இந்த பாறைகள் நடு கடலுக்குள் சென்றதாக கூறப்படுகிறது. இந்த கோவிலில் பல சிறப்புகள் உள்ளன அவைகளை பற்றி கீழே காணலாம் வாருங்கள்
தன்னாலாட்
இந்தோனேஷியாவின் பாலி பகுதியில் உள்ள இந்த கோவிலுக்கு தன்னாலாட் என பெயர் இதற்கு அதர்த்தனம் கடலின் நிலம் என கூறப்படுகிறது. இந்த கோவில் பாலி பகுதியில் கடலில் கட்டப்பட்ட 7 கோவில்களில் இதுவும் ஒன்று. இந்த 7 கோவில்களிலும் ஒன்றிலிருந்துபார்த்தால் அடுத்த கோவில் தெரியும்படி இந்த கோவில்கள் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த கோவில்கள் பல ஆண்டுகளாக பெரும் அளவில் சேதமில்லாமல் இருந்தது. 1980களில் ஏற்பட்ட பெரும் புயலால் பெரும் அளவிற்கு சேதம் ஏற்பட்டு இந்தகோவிலின் சில பகுதிகள் இடித்து விழுந்தது. அதன் பின் இந்த கோவில் இருக்கும் இடங்கள் அபாயகரமான பகுதியாக அறிவிக்கப்பட்டது.இந்த கோவிலில் சேதமடைந்த பாகங்களை சீர் செய்ய ஜப்பான் நாடு,இந்தோனேஷியாவிற்கு உதவியுள்ளது. அதன் பின்னர் இந்தகோவில் புதிய லுக்கை பெற்றுள்ளது. அதன் பின்பு இந்த இடம் பாதுகாப்பான இடமாக மாற்றப்பட்டுள்ளது.
இந்த கோவில் 15ம் நூற்றாண்டில் நிரித் என்பவரால் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. அவர் இப்பகுதி வழியாக நடந்து வரும் போது இப்பகுதியின் அழகை பார்த்து பிரம்மித்து போய் அங்கேயே ஒரு இரவு தங்கியதாகவும், மறுநாள் அப்பகுதியில் உள்ள மீனவர்களிடம் இப்பகுதியில் நீர் கடவுளுக்காக ஒரு கோவில் கட்டவேண்டும் என சொல்லியுள்ளார். அதன் பின் தான் இந்த கோவில் உருவாகியுள்ளார்.
இந்த கோவிலின் பாதுகாப்பிற்காகவும், பல தீய மனிதர்கள் மற்றும் தீய ஆவிகளிடமிருந்து இந்த கோவிலை பாதுகாக்கவும் இந்த கோவிலுக்கு அடியில் அதிக விஷத்தன்மை வாய்ந்த பாம்புகள் வாழ்ந்து வருவதாகவும், அவைதான் இந்தகோவிலை காத்து வருவதாகவும் நம்பப்படுகிறது.
மர்மம் என்ன?
உண்மையிலேயே இப்படிகோவிலில் பாம்புகள் உள்ளதா என தெரியவில்லை. அப்படி இருந்தால் அந்த கோவிலை காக்க பாம்புகள் ஏன் இருக்க வேண்டும்? அப்படி என் அந்த கோவிலில் இருக்கிறது. பொதுவாக இந்து கோவில்களில் பாம்புகள் இருந்தால் அந்த கோவிலில் பணமதிப்பில்லா பொருட்கள் ஏதேனும் இருக்கும் என நம்பபடுகிறது. அப்படி அந்த கோவிலுக்குள்ளும் ஏதேனும் இருக்கிறதா? எல்லாம் மர்மம் தான்.